ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வி.வினோதினி காலமானார்
Page 1 of 1

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23). சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித்தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த ஜனவரி 27 தைப்பூசத்தன்று வினோதினியை நாம் தியாகி திரு.முத்தப்பா அவர்களுடன் சென்று சந்தித்தபோது கூட நம்முடன் அவர் படுக்கையில் இருந்தபடி பேசினார். முகத்தில் காயங்கள் ஓரளவு குணமாகத் துவங்கியது தெரிந்தது. நம்மிடம் நம்பிக்கையுடன் பேசினார். “நன்றி அண்ணா. உங்களையெல்லாம் பார்க்க முடியவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது” என்று துடித்தார். பின்னர் இரண்டாம் கட்ட தொகையை அவர் தந்தையிடம் திரு.முத்தப்பா அவர்கள் மூலம் வழங்கினோம்.
அவர் இறப்பு செய்தியை நம்ப முடியாது தவிக்கிறேன். அவர் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
நம் தளத்தின் சார்பாக வினோதினிக்கு அஞ்சலி செலுத்தவும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் நண்பர் ராஜா மற்றும் உள்ளிட்டோர் வினோதினி சிகிச்சை பெற்று வந்த ஆதித்யா மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் மகனுக்கு 21 வயது. இளங்கலை படிப்பு முடித்து முதுகலைப் படிப்பிற்கு வெளியூர் சென்றான். பொறுக்க முடியாத தலைவலி காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறான். தலைவலி குணமாகி படிப்புத் தொடர பரிகாரம் கூறுங்கள்...
» பாலைச் செல்வி
» தாமரைச் செல்வி
» பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
» உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: ஆசிட் வீச்சில் 4 சகோதரிகள் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum