தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

Go down

அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை! Empty அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

Post  ishwarya Sat Feb 16, 2013 6:18 pm

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் மீது எனக்கு எப்போதும் பெரு மதிப்பும் அன்பும் உண்டு. லிங்கனை பற்றி நினைக்கும்போதெல்லாம் “இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருந்திருக்கிறாரா? வாழ்ந்தும் இருக்கிறாரா?? நாமெல்லாம் ஒரே ஒரு தோல்வி வந்தாலே நொறுங்கிப் போய்விடுகிறோமே? மனிதர் எப்படி இத்தனை தோல்விகளையும் பர்சனல் வாழ்க்கையின் துயரங்களையும் தாங்கிக்கொண்டு சாதித்திருக்கிறார்” என்று வியப்பு மேலிடும்.

என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர் அவர். (என்னுடைய விசிட்டிங் கார்டில் நான் பொறித்திருக்கும் உருவங்களில் லிங்கன் தான் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறார் தெரியுமா?)

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பிப்ரவரி 10 ஆம் தேதி நடத்தப்பட்ட ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சியில் ஒரு சிறப்புரையை நிகழ்த்தினேன். நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக வந்திருந்த பார்வையாளர்கள் திரு.லிங்கனை பற்றிய உரை கேட்டு ரசித்து கைதட்டினார்கள் என்றால் லிங்கனின் பெருமையை என்னவென்று சொல்வது?

அமெரிக்காவில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் “நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் “யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத்தவிர.

உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் “தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் தான் செல்ல விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை. நரகத்தையிம் விரும்பவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான்.

உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?” என்று கேட்டார். அந்த சிறுவனோ அமைதியாக “இங்கே கறுப்பு இன மக்களை நாயைவிட கேவலமாக -கொடுமையான முறையில் – நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியான இருக்கும்” என்று கூறினான்.

முதலில் அவன் மீதும் கோபப்பட்ட பாதிரியார் அவன் உயர்ந்த உள்ளத்தை புரிந்துகொண்டு, “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார். (இதே வாக்கியத்தை சொன்ன மற்றொரு பிரபலம் யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர்!)

அந்த சிறுவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான்.

அந்த சிறுவன் தான் 16 வது அமெரிக்க ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கன். நேற்று பிப்ரவரி 12, செவ்வாய்க் கிழமை அவரது பிறந்த நாள்.

(நேற்றைய தினமே இந்த பதிவு அளிக்கப்படுவதாக இருந்தது. வினோதினியின் மறைவுச் செய்தியை தொடர்ந்து ஒரு நாள் இந்த பதிவை ஒத்திவைத்து, அவர் மறைவு தொடர்பான பதிவுகளை நேற்று அளித்தோம்.)

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார் லிங்கன். பிறந்ததிலிருந்தே அவர் வாழ்க்கை போராட்டமாகத் தான் இருந்தது. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். 9 மைல் காடுகளுக்கிடையே நடந்து சென்று தான் அவர் பள்ளிக்கூடத்திற்கு செல்லவேண்டும்.

ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.

அவர் தந்தை தச்சு வேலை முதல் செருப்பு தைப்பது வரை பல வேலைகள் செய்து வந்தார். லிங்கனும் அவரது தந்தையின் பணிகளில் உதவி வந்தார்.

இளைஞனாகி, ஒரு நாள் பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேறியது. சந்தையில் விற்கப்படும் அடிமைகளை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்து தான் வாங்குவார்கள். அவர்களது உணர்ச்சியை சோதித்து பார்ப்பது, அவர்களை கிள்ளி பார்ப்பது, சுமை தூக்கிக்கொண்டு ஓடச் செய்வது, கசையடி கொடுப்பது இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வாங்க வேண்டிய அடிமையை முடிவு செய்வார்கள். இந்த சோதனைகளில் இருந்து பெண்கள் கூட தப்பவில்லை.

சந்தையில் விற்கப்படும் அடிமைகளை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்து தான் வாங்குவார்கள். அவர்களது உணர்ச்சியை சோதித்து பார்ப்பது, அவர்களை கிள்ளி பார்ப்பது, சுமை தூக்கிக்கொண்டு ஓடச் செய்வது, கசையடி கொடுப்பது இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வாங்க வேண்டிய அடிமையை முடிவு செய்வார்கள். இந்த சோதனைகளில் இருந்து பெண்கள் கூட தப்பவில்லை. தான் அமெரிக்க ஜனாதிபதியாகி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்ததும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். முன்பு தேவாலயத்தில் பாதிரியார் சொன்னதும் இதையேத் தான்.

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்! (1865 ஆம் ஆண்டு நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நிறவெறி பிடித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் லிங்கன்!)

லிங்கன் தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை.

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகளை தருகிறேன் பாருங்கள்….

*தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.*

*வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.*

*மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.*

*குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.*

*அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.*

*தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.*

இப்படி லிங்கனின் சொல் செயல் அனைத்திலும் வித்தியாசம் இருந்தது.

WINNERS DON’T DO DIFFERENT THINGS. THEY DO THINGS DIFFERENTLY அல்லவா?

சேற்றில் சிக்கிய பன்றி…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆப்ஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம்… முதல் முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நன்றாக உடை உடுத்திக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன்.காரை அவ்ரே ஓட்டினார்.

ஓரிடத்தில் சாலையோரத்தில் சேறு நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு பன்றிக்குட்டி சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

உடனே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.. நாடாமன்றக் கூட்டத் தொடரை விட அந்தப் பன்றிக் குட்டியைத் துன்பத்திலிருந்து விடுவிப்பது அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியது.

சேறு நிறைந்த பள்ளத்தில் இறங்கினார்.. ஷுக்கள் ஆடைகள் அனைத்திலும் சேறு பட்டது

அருவருப்பான அந்த சூழ்நிலையைக் கண்டு சிறிது கூட முகம் சுழிக்காத அவர் சேற்றில் சிக்கியிருந்த பன்றிக்குட்டியைக் காப்பாற்றினார்.அது மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளி குதித்து ஓடியது.

முழு நிம்மதி பெற்ற ஆப்ஹாம் லிங்கன், சேறு படிந்த அந்த ஆடைகளோடு காரில் ஏறினார்..அப்படியே சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்.

சபையோர் சேறு படிந்த அவரது உடைகளை கண்டு முகம் சுழித்து கொண்டு குழப்பத்தோடு பார்த்தனர்.

அவர்களது பார்வையில இருந்த அர்த்ததை புரிந்து கொண்டு.. விஷயத்தை சொன்னார்..அதை கேட்டதும் சபையே அவரை பாரட்டியது.

தற்கு ஆப்ரஹாம் லிங்கன் “இதற்கு பாரட்ட வேண்டிய அவசியமில்லை.. துன்பத்தில் போராடும் உயிரை காப்பற்றுவது மனிதனின் கடமை.. அதைத் தான் ஜனாதிபதி ஆகிய நான் செய்தேன்.” என்றார் பெருந்தன்மையோடு.
மிஸ்டர் லிங்கன் ரொம்ப பெருமைப்பட்டுக்காதீங்க…

ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார். “மிஸ்டர் லிங்கன், உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்.” என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல, இப்போது உம் செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன்.” என்று ஒரு போடு போட்டார்.

எனவே நம் பெற்றோரோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ வறுமை நிலையில் இருப்பதையோ அல்லது வசதியற்றவர்களாக இருப்பதையோ ஒரு போதும் நாம் தாழ்வாக கருதக்கூடாது. அந்த நிலையிலும் நாம் லட்சியத்தை உறுதியாக பற்றியிருந்து அடைகிறோம் என்றால் அது தான் உண்மையான பெருமை. உண்மையான சாதனை.

உதாரணத்திற்கு அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்றிருக்கும் பிரேமாவை எடுத்துக்கொள்வோம். அவரது பேட்டியை கூட நமது தளத்தில் வெளியிட்டிருந்தேன். அவர் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர் தான். ஆனால் அது குறித்து அவர் கவலைப்படவில்லை. சோர்ந்துபோகவில்லை. தனது அயராத உழைப்பால் படித்து இன்று அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் முதலிடம் பெற்று தமது பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதே ஆட்டோவில் தனது பெற்றோருடன் அமர்ந்து சாதனை போஸ் கொடுக்கிறார். இது தானே வாழ்க்கை?

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம் எல்லோருக்கும் பொருந்தும்.

நல்லவற்றையே நினைப்போம்.

நல்லவற்றையே செய்வோம்.

நல்லதே நடக்கும்.

(மேலே நான் கூறியிருக்கும் லிங்கன் பற்றிய செய்திகளில் தன்னுடைய மகனின் ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் பகுதியை மட்டும் என்னுடைய உரையில் சொல்லவில்லை. மறந்துவிட்டேன். மற்ற அனைத்து பகுதிகளும் எனது உரையில் சொன்னவை தான்…. பல இடங்களில் பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள் என்றால் லிங்கன், அவர்கள் மனதில் எந்தளவு ஊடுருவியிருப்பார் என்று நினைத்து பாருங்கள்!)

[குறிப்பு : ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு - பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்தில் - 'லிங்கன்' என்கிற திரைப்படம் அண்மையில் ரிலீசாகியிருக்கிறது. குழந்தைகளுடன் அவசியம் சென்று (தியேட்டரில்) பாருங்கள். வார இறுதியில் நண்பர்களுடன் நான் செல்லவிருக்கிறேன்.]

நமது மகா பெரியவா மகிமைகள் நிகழ்ச்சி பற்றிய பதிவுகள் அடுத்தடுத்து வரும்….. அதில் விழாவில் நடைபெற்ற மற்ற சுவாரஸ்யமான நிகழ்சிகளை பார்ப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum