ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
Page 1 of 1
ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
ஒகேனக்கல்: தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள், நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி சாமியை வழிபடுவர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கையொட்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள். அவர்கள் ஆற்றில் நீராடி, தங்கள் குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
ஆடிப்பெருக்கை யொட்டி தர்மபுரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமைச்சர்கள் பழனியப்பன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வறண்டு கிடக்கும் காவிரி வழக்கமாக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஆடி மாதம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு வரும். இந்த ஆண்டு தண்ணீர் சிறிதளவு தான் ஓடுகிறது.
ஆடிப்பெருக்கு விழா காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வைபவமாக ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை கோலாகலமாக நடைபெறும். காவிரியில் அதிகாலை முதல் மாலை வரை பல லட்சம் பேர் நீராடுவார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் நாளை காவிரியில் நீராடி தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்று வெள்ளத்தில் விட்டு, தாலிப்பெருக்கு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். காவிரி நதிக்கரைகளில் எல்லாம் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், ஒகேனக்கல், மேட்டூர், பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லணை, திருவையாறு ஆகிய இடங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
» பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
» குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு
» மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum