ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
Page 1 of 1
ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
உத்தராயணம் முடிந்து தட்சணாயாணம் பிறந்துள்ளது. பூலோக மனிதர்களாகிய நமக்கு வருடத்தின் முதல் ஆறுமாதங்கள் கோடைகாலம் அதாவது வசந்தம் முடிந்து மாரிகாலம் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ளது. ஆனால், தேவர்களுக்கு தேவலோகத்தில் பகல் முடிந்து இரவு ஆரம்பமாகிறது. நமக்கு ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள் ஆகும். வருடத்தின் முதல் ஆறு மாதங்களும் அரைநாள் பகல் பொழுது. இனி வரும் ஆறு மாதங்களும் மிகுதி அரைநாள் இரவு பொழுது. இப்படி பார்க்கும்போது தேவர்களுக்கு சாயங்காலம் நேரம் பிறக்கின்றது. உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு நம்மைக் காத்திட வேண்டி அவள்
அருள் பெற ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.
அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள். காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும். எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர்.
பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை. அதை அழகுற அணிவித்து அழகாக்குவர். தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.
தைமாதம் சூரியனை வழிபட்டு உத்தராயண காலத்தை ஆரம்பித்து மாசி மாதம் சிவனையும் பங்குனியில் முருகன், சிவன், விஸ்ணு, அம்மன் என எல்லாத் தெய்வங்களையும் பின் சித்திரை மாதம் அம்மன், சிவன் எனவும் வைகாசி மாதம் முருகன், அம்மன் எனவும் ஆனியில் சிவன் எனவும் வழிபாடாற்றுவர். பின் தட்சணாயணம் காலம் பிறந்ததும் ஆடிமாதம் அம்பிகைக்கும் பின்னர் ஆவணி மாதம் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானையும், கிருஷ்ணரையும், புரட்டாதி மாதம் நவராத்திரி ஒன்பது நாட்கள் துர்க்கா, இலஷ்மி, சரஸ்வதி எனும் முத்தேவியரையும் வழிபட்டு பிதுர்களின் ஆசிவேண்டி அவர்களையும் வழிபடுவர்.
அதன்பின் ஐப்பசி மாதத்தில் ஸ்கந்தசஷ்டி ஆறு நாட்கள் சண்முகருக்கு விரதம் அனுஷ்டித்து வழிபட்டு, மகாலஷ்மியையும் பூஜித்து, கார்த்திகையில் தீபமும்
திருமுருகனுக்கும், விஸ்ணுவுக்கும், சிவனுக்கும் ஏனைய அனைத்து தெய்வங்களுக்கும் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வர். மார்கழியில் விநாயகர், சிவன், அம்மன், விஸ்ணு, ஐயப்பன் என எல்லாத் தெய்வங்களையும் வழிபடுவர். ஆன்மாக்கள் பேரின்ப பெரு நிலையை அடைய என முன்னோர்கள் தெய்வ வழிபாட்டை இப்படி வகுத்து எமக்கு நன்னெறி காட்டியுள்ளார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளை கொண்டாடுவோம்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» புரட்டாசி மாதத்தில் அசைவம்
» அம்மனை வழிபடும் சூரியன்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» புரட்டாசி மாதத்தில் அசைவம்
» அம்மனை வழிபடும் சூரியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum