அம்மனை எழுந்தருளச் செய்தல்
Page 1 of 1
அம்மனை எழுந்தருளச் செய்தல்
நவராத்திரி பூஜை தொடங்கும் போது முதலில் நமது விருப்பப்படி விட்டிலுள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள். அடுத்ததாக ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்து கலசம் வைக்க வேண்டும்.
நீர் ஊற்றும் போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.
அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகை மேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். கொலுப்படிகளுக்கு வடக்கு புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும்.
இப்படி அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்த பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
வான் உலகும் மண் உலகும் வாழமறை வாழுப்
பான் மைத்ரு செய்யததமிழ்ப் பார்மீசை விளங்க
ஞானமத ஐந்து கர நால்வா யானை முகனைப்
பரவி அஞ்சலி செய்கிற்பாம்
இறுதியாகச் சொல்லியபின் விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். அதற்குரிய பொருட்களான மஞ்சள் பொடி, சந்தனம், உதிரிமலர், ஊதுவத்தி, பஞ்சுதிரி, கற்பூரம், வெல்லம், அரிசி, தயிர், தேன், குங்குமம், புஷ்பமாலை, வெற்றிலைப்பாக்கு, சாம்பிராணி, நல்லெண்ணெய், அரிசி, வாழைப்பழம், தேங்காய், பூஜைக்குரிய மணி, தாம்பாளம், கற்பூர தட்டு, பஞ்சபாத்ர உத்தரணி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அம்மனை எழுந்தருளச் செய்தல்
» இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா?
» அம்மனை வழிபடும் சூரியன்
» ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
» இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா?
» அம்மனை வழிபடும் சூரியன்
» ஆடி மாதத்தில் அம்மனை கொண்டாடுவோம்
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum