தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

Go down

 திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம் Empty திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:13 pm

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த ஆடி கிருத்திகை விழாவில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என்ற
கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. முருகனை தரிசிக்க
நேற்றிரவே தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். விடுதி மற்றும் மலை பகுதியில் தங்கி இருந்தனர்.இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த முருகப் பெருமானுக்கு தங்க கவசம், பச்சை மரகத கல் அணிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சியை காண பக்தர்கள் முண்டியடித்தனர். தர்ம தரிசனம், கட்டண தரிசனம் வழிகள் நிரம்பி வழிந்தன. சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து முருகனை
வழிபட்டனர். ‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் மலையில் எதிரொலித்தது. மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரை பக்தர்களின் தலைகளாக தெரிந்தது. வழிநெடுக பக்தர்களுக்கு நீர், மோர், பிரசாதம் வழங்கினர். பால், பன்னீர், புஷ்ப காவடிகளை பக்தர்கள் எடுத்துவந்தனர். நீண்ட வரிசையில் நின்று ஆண், பெண் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

பக்தர்களின் வசதிக்காக திருத்தணிக்கு ஒதுக்குப் புறத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருப்பதால் வயதானவர்கள், சிறுவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் கோயிலுக்கு வர மிகவும் சிரமப்பட்டனர். இன்று மாலை 6 மணிக்கு சரவண பொய்கை குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கிறது. இதற்காக தெப்பத்தில் தேர் செய்யப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து முருகர், வள்ளி, தெய்வானையுடன் தெப்பத்துக்கு வருகிறார். தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். தெப்பத்தில் பக்தி கச்சேரி நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum