வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா : இன்று இரவு பெரிய தேர் பவனி
Page 1 of 1

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் இன்றிரவு பெரிய தேர் பவனி நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுபெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைத்து கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்,
தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இன்று மாலை 5.15 மணியளவில் பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடைபெறுகிறது. பின்னர் இந்தியாவிற்கான திருத்தந்தையின் தூதர் டாக்டர்.சால்வத்தோரே மென்னாக்கியோ, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பெரிய தேர் பவனி நடக்கிறது.
நாளை காலை 6 மணியளவில் புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளையொட்டி, சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் அன்னையின் கொடி இறக்கப்பட்டு ஆண்டுத்திருவிழா நிறைவடையும். விழாவையொட்டி, வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : இன்று இரவு கருடசேவை
» மோகினி அலங்காரத்தில் மலையப்பசுவாமி பவனி : இரவு கருட சேவை
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» பில்லா 2 டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ்
» வேளாங்கண்ணி ஒரு கண்ணோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum