தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தடைகளை தகர்க்கும் புரட்டாசி விரதம்

Go down

 தடைகளை தகர்க்கும் புரட்டாசி விரதம் Empty தடைகளை தகர்க்கும் புரட்டாசி விரதம்

Post  ishwarya Sat Feb 16, 2013 4:45 pm

பூர்வ ஜென்ம கர்ம வினைகள், பாவ தோஷங்களால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை நீங்கவும், பாவ வினைகள் தொடராமல் இருக்கவும், ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சகல பாக்கியம் கிடைக்கவும், வழிபாடுகள், விரதங்கள் காலம் காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் அருமருந்தாகும். அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமையும், மகத்துவம் மிக்கதும் ஆகும்.ஒவ்வொரு தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும்.

பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி, விஷ்ணுவுக்கு உரிய வழிபாடுகளையும், விரதங்களையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோவில்களிலும், 108 திவ்ய தேசங்களிலும் புரட்டாசி சனி வழிபாடு மிக விமரிசையாக நடைபெறும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருப்பார்கள். ஆகவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றழைத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்களை செலுத்தவும், குறிப்பாக முடி இறக்குதலை நிறைவேற்றவும் இந்த மாதம் சிறப்புடையதாகும்.

சனிக்கிழமை வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து அறுசுவை உணவுடன் வடை, பாயாசம், சர்க்கரை பொங்கல செய்து எம்பெருமானை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி “நாராயணா... கோபாலா... கோவிந்தா...“ என்று கோஷமிட்டபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி தானம பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து படைத்து அக்கம், பக்கத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவார்கள். குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்து காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. பல இடங்களில் உறியடி திருவிழாவும் நடைபெறும்.

இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் பத்து நாட்கள் மிகவும் விசேஷம். அதைத்தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடுகிறோம். சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களின் சஞ்சாரம் மூலம்தான் நம் பண்டிகைகள் கணிக்கப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசியில் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன் - சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை. காரணம் இந்த மாதம் கன்னி ராசியில் சூரியனுடன், புதனும் சேர்ந்து உச்ச பலத்துடன் குரு பார்வை பெற்று சஞ்சாரம் செய்கிறார். அதேநேரத்தில் விரத நாள் கிரகமான சனீஸ்வரர் துலாம் ராசியில் உச்ச பலத்துடன் உள்ளார். ஆகையால் இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்கள் அருளும். அதிலும் மூன்றாவது சனிக்கிழமையை மிகவும் விசேஷமாக கருதுவார்கள். ஜாதக அமைப்பின்படி சனி, திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட சகல தடைகள் சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum