தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் 21ம் ஆண்டு விழா

Go down

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் 21ம் ஆண்டு விழா Empty பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் 21ம் ஆண்டு விழா

Post  ishwarya Sat Feb 16, 2013 4:39 pm

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பவானி நகர் மக்கள் சார்பில் 21ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி கிராம மக்கள்
கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தர்ம ராஜா கோயிலில் இருந்து அலகு குத்திய பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, அம்லு ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேலுமயில் செய்திருந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum