சுபிட்சம் தரும் மகாளய பட்சம்
Page 1 of 1
சுபிட்சம் தரும் மகாளய பட்சம்
ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவங்கள் நிறைந்ததாக அமாவாசை, பவுர்ணமியை சொல்வார்கள். புண்ணிய மாதமான புரட்டாசியில் கன்னி ராசியில் சூரியன் இருக்க, குரு பார்வையுடன் மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம்
புரட்டாசி மாத பவுர்ணமியாகும். புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் (அக்டோபர் 1 முதல் 15 வரை)‘மகாளய பட்சம்’ என்று அழைக்கப்படுகிறது. மகாளயம் என்றால் ஒன்று சேர்வது என்று பொருள் கொள்ளலாம். இறந்த நம் முன்னோர்கள், மூத்தோர்கள், பித்ருக்கள் மகாளய பட்ச காலத்தில் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
பொதுவாக முன்னோர்களை நாம் தினசரி வணங்கி வந்தாலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் திதி கொடுப்பது இந்துக்களின் வழக்கம். மகாளய பட்ச காலத்தில் தினமும் அவர்களை நினைத்து தர்ப்பண காரியங்கள் செய்வது அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால் அவர்களது பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும். அவரவர் குடும்ப வழக்கப்படி, முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். வீட்டில் இறந்தவர்களின் படங்களுக்கு மலர் மாலை சூட்டி அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம்.
இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா-அம்மா இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் மகாளய பட்ச காலத்தில்
அப்பா, அம்மாவை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களுக்கு முக்தி கிடைத்து சொர்க்க லோக பிராப்தி கிடைக்கவும் மகாளய பட்ச கால வழிபாடுகள் ஒரு வரப்பிரசாதமாகும். மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் ‘மகாபரணி’ என்று அழைக்கப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் அஷ்டமி, திரயோதசி திதிகளில் செய்யும் வழிபாடுகள் மிகவும் நலம் பயக்கும் என்பது ஐதீகம். மகாளய பட்ச நாட்களில் புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பு. சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் செய்யலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.
காகத்துக்கு தினமும் உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழங்கள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ, தோஷங்கள் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். நாம் இந்த பூமியில் பிறப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் அம்மா, அப்பா. பெற்றெடுப்பது முதல் படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குவது வரை நமக்காக, நம் வளர்ச்சிக்காக கடுமையாக சிரமப்பட்டவர்கள் அவர்கள். கடைசிகாலம் வரை அவர்களை மகிழ்ச்சியாக, நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு மகன், மகளின் கடமை.
அவர்களது மறைவுக்கு பிறகு, அவர்களை நினைவுகூர்வது நமக்கும் நமது சந்ததிக்கும் பல வளங்களை சேர்க்கும். அமாவாசையன்று தர்ப்பணங்கள் செய்வதும், ஆண்டுதோறும் அவர்களது திதி நாளில் திவசம் கொடுப்பதும், தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் புனித நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பதும் புண்ணிய காரியங்களாக, ஒவ்வொருவரின் உயர்ந்த கடமையாக கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் மிக்க மகாளய பட்ச காலத்தில் முன்னோரை நினைத்து வழிபடுவோம். அவர்களது பரிபூரண ஆசியால் பாவ, தோஷங்கள், தடை, தடங்கல்கள் நீங்கப் பெற்று சுபிட்சமான வாழ்வு பெறுவோமாக.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுபிட்சம் தரும் சுப்ரமணியன்
» மகாளய அமாவாசையின் முக்கியத்துவம்
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» மகாளய பட்ச வழிபாடு விதிகள்...!
» செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum