திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
Page 1 of 1
திருமண வரமருளும் அன்னை புவனேஸ்வரி
உத்தர நவசாலபுரி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட சென்னை ஆதம்பாக்கத்தின் மேற்குப் பகுதியான ஆண்டாள் நகரில் அன்னை புவனேஸ்வரி ஆலயம் அமைந்துளளது. புவனேஸ்வரியின் தரிசனம் சர்வ பாவங்களையும் பொசுக்க வல்லது. தொடர்ந்து ஆறு பௌர்ணமி மாலை சாத்தி வணங்குபவரின் திருமணத்
தடை நீங்கும். பௌர்ணமி அன்று தேவிக்கு சூட்ட வரும் சுமார் இரண்டாயிரம் மாலைகளே அதற்கு சாட்சி. புவனேஸ்வரியின் அன்னபூரணி அலங்காரம் அளவிலா அழகுடையது. ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உணவருந்த அருள் புரியும் அம்பிகை.
காசி தலத்தில் கோலோச்சிக் கொண்டிருப்பவள். ஈசனுக்கே உணவளிக்கும் தேவி. ஆதிசங்கரர் தன் அன்னபூர் ணாஷ்டகத்தில் பிட்சையிட வேண்டி இறைவியைத் துதித்து கடைசியில் ஞானம், வைராக்யம் போன்றவற்றையே வேண்டி நின்றார். அன்னை பூரணியைத் தொழ, உணவுப் பஞ்சமின்றி வாழலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புவனேஸ்வரி தேவியை பிரதிஷ்டை செய்த தை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று உலக நலன் கருதி வேள்வியும் மகா அபிஷேகமும்
செய்யப்படுகின்றன. பூரண மகாமேருவிற்கு மாதத்தில் ஐந்து நாட்கள் நவாவரண பூஜை செய்யப்படுகிறது.
இந்தக் கோயில், சென்னை ஆதம்பாக்கம் ஆண்டாள் நகரில் அமைந்துள்ளது. பரங்கி மலை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது.
குழந்தை பாக்கியம், திருமண தடை நிவர்த்தி வேண்டி நாமக்கல் நாமகிரிஅம்மன் கோயிலுக்கு பல ஊர்களில் இருந்து பெண்கள் வந்து செல்கிறார்கள். அம்மனை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. திருமண யோகம் கைகூடுகிறது. அதற்கு பிராயசித்தமான புதுமண தம்பதியினர் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு வளையல் அணிவித்து வணங்குகிறார்கள். சிலர் அம்மனுக்கு பட்டுப்பாவடை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படிப்பு வரமருளும் பரிமுகன்
» புவனேஸ்வரி அஷ்டகம்.
» பதினாறு செல்வங்களும் அருளும் புவனேஸ்வரி
» புதுவாழ்வு நல்கும் புவனேஸ்வரி
» புவனேஸ்வரி இப்போ ‘பக்திப் பழம்’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum