தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர்

Go down

மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர் Empty மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:36 pm

வேலூர் - அணைக்கட்டு

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கலனாகித்தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! -ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் மறைந்து வளர்ந்து, தான் என்ற அகந்தையுடன் சர்வமும் தானே என இறுமாப்புக் கொண்டு அடாத செயலில் ஈடுபட்ட கம்சனுக்கு நெருப்பாகி நின்ற திருமாலே, உன்னிடம் அடிமைகளாக சரணடைந்து பாடி துதிக்கிறோம்.

எங்களின் குறைகளைக் களைந்து அருள்வாய்! என்று ஆண்டாள் நாச்சியாரால் பாடிப் பரவிய திருமாலுக்கு பாடல் பெற்ற திருத்தலங்களும் பிற சிறப்புமிக்க தலங்களும் தமிழகத்தில் நிறைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான திருத்தலங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றவை. சரஸ்வதியின் கோப அலையை (பாலாற்றில்), பள்ளிகொண்டபடி தடுத்து பிரம்மனின் யாகம் பூர்த்தி செய்ய உதவிய நெடுமால், பள்ளிகொண்டாவை அடுத்த அணைக்கட்டு ஜவ்வாது மலையடிவாரத் தில் கல்யாண வெங்கடேஸ்வரராக பூதேவி-ஸ்ரீதேவி நாச்சியார்களுடன் சப்த ரிஷிகளுக்கு நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்பாலித்து இங்கே கோயில் கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் நித்ய கல்யாணப் பெருமாள் என்ற பெயரில் மகாபலிபுரம் உட்பட இரண்டு தலங்கள் உண்டு. அவற்றில் லட்சுமி வராகமூர்த்தியாக நித் தமும் திருமணம் காணும் பெருமாளாக அருள்பாலிக்கும் மாலவன், கல்யாண வெங்கடேஸ்வரராக காட்சி அளிப்பது திருப்பதி ஸ்ரீநிவாசமங்காபுரத்திலும் தமிழகத்தில் தொண்டை மண்டலத்தை சேர்ந்த அணைக்கட்டிலும்தான். அங்கு 8 அடி உயரத்தில் காட்சி அளிக்கும் பெருமாள், இங்கு திருப்பதி மூலவர் போன்றே தனது வலது கரத்தை பாதம் நோக்கிக் காண்பித்து, சிறிய மூர்த்தியாக, என்னை சரணடை, உனக்கு நானிருக்கிறேன் என்று கூறும் வகையில் அபய முத்திரையுடனும் இடது கையை இடுப்பில் தாங்கியவாறும் தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

ராஜகோபுரமின்றி ஆரம்பத்தில் சிறிய கருவறையுடன் அதைச் சுற்றி அமைந்த சுற்றுச்சுவர்களுடன் உள்ள இக்கோயில் விஜயநகர காலத்து கட்டிடக் கலையுடன் கூடிய அர்த்த மண்டபம் மற்றும் கருவறையுடன் அமைந்துள்ளது. கோயிலின் முன்புறம், அதே கலைப்பாணியில் அமைந்த ஊஞ்சல் மண் டபம், அதை அடுத்து தீபத் தூண். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் காணப்படும் கொடிமரம் இங்கு இல்லை. இரண்டு பலி பீடங்களும் மூலவரை நோக்கி நின்ற நிலையில் வணங்கும் கருடாழ்வார் சந்நதியும் உள்ளன. அர்த்த மண்டபத்திற்கு வெளியே இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் நாகதேவதைகளும் அமைந்துள்ளார்கள். இது எங்குமில்லாத சிறப்பாகும். அத்துடன் இத்தலத்தில் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனி பகவான் மற்றும் நவகிரக சந்நதிகளும் அமைந்துள்ளன.

வலது கோடியில் தனிச்சந்நதியில் ஆண்டாள் நாச்சியார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கோயிலுக்கு பின்புறம் மிகப்பெரிய அளவில் குள மொன்று தூர்ந்துபோய் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. இத்தல இறைவனை, திருமணமாகாத கன்னிப் பெண்களும் ஆண்களும் மனமுருகப் பிரார்த்தித்தால் உடனே திருமண பாக்கியம் கைகூடுவதாக பக் தர்கள் மெய்சிலிர்க்கின்றனர். அதற்கேற்ப அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏழைகள் திருமணம் செய்யும் இடமாகவும் சிறந்த பிரார்த்தனை தலமாகவும் வி ளங்குகிறது.

இங்கு கும்பாபிஷேகம் நடந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது என்கின்றனர் இப்பகுதி மக்கள். இக்கோயில் திருப்பணி வேலை களை மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த இறையன்பர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வேலூரில் இருந்து அணைக்கட்டு பஸ் நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தாலே இக்கோயிலை அடையலாம். வேலூர் பொற்கோயிலுக்கு வருபவர்கள் அங்கிருந்து 12 கி.மீ. பயணம் செய்து இக்கோயிலை அடையலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum