தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோளால் தோன்றும் கோளாறும் களையலாகுமே!

Go down

கோளால் தோன்றும் கோளாறும் களையலாகுமே! Empty கோளால் தோன்றும் கோளாறும் களையலாகுமே!

Post  ishwarya Sat Feb 16, 2013 1:30 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - திருக்குற்றாலம்

செண்பக மலர்கள் பூத்துக் குலுங்கிய மலை, திருக்கூடாச்சலம். இந்தத் திருக்கூட மலையே பின்னாளில் திருக்குற்றாலம் என வழங்கலாயிற்று.

‘‘சிவத்துரோகிகள் கூடி தொழுத
கோயில் - துரோகந் தன்னாலெழுந்த
தீட்டகற்றிய நாதனார் நிற்குஞ்
சிவனிவனை குடமுனி மாலவனைக்
குறுக்கி கோர்க்க அயனும் அடங்க
நிற்பனே’’

-என பேசுகின்றார், குதம்பைச் சித்தர். சிவபெருமானுக்கு செய்த அபச்சாரத்தை நீக்க, பிரம்மதேவன் உபதேசத்தினால், சூரியன் உள்ளிட்ட தேவர்கள் தொழுது நின்ற லிங்கம் இது. அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட விஷ்ணு அம்சங்கொண்ட சிவலிங்கம் இந்தக் குற்றாலநாதன்.

‘‘சங்கே வடிவாம் சித்திரமே சடையாம்
மகுடாகமே வடிவாம் சண்பகமே வனமாம்
அன்னை பீடத்து மேலாம் -
குறும்பலாவென தலவிருட்
சங் கொண்ட சிவமது கங்கை
யொடு சித்திர தீர்த்தங் கொண்ட
ஆதிசக்தி யமர் நாதனம்பலங் கண்டுய்யலாமே’’

-என்று கொங்கணச் சித்தர் கோயிலின் அம்சத்தை போற்றுகின்றார். விஷ்ணு பகவானின் கரத்தில் உறையும் சங்கைப் போன்ற வடிவத்தில் இந்தக் குற்றாலிங்கனார் அமர் கோயில் அமைந்தமையால், இதனைச் சங்கக் கோயில் என வானோர் கொண்டாடுகின்றனர். ஆகமத்தில், இது மகுடாகம வடிவம் கொண்டு நிற்கிறது. திருக்கூடாச்சலமென புராணம் போற்ற, குறும் பலா என்ற மரம் தலவிருட்சமென நிற்கின்றது. இங்கு சிவ மதுகங்கை என்ற தீர்த்தம், குபேரனுக்கு மிகவும் பிடித்தமானது வட அருவி மற்றும் சித்திரா நதி ஆகிய தீர்த்தங்கள் இந்தப் பகுதி பூமியை புனிதப்படுத்துகின்றன.

எண்ணற்ற மூலிகைகளை கலந்து வரும் இந்தப் புண்ணிய, புனித தீர்த்தங்கள் நமது பாவத்தை போக்கும்; வியாதியை நிவாரணம் செய்யும். கயிலாயமலை சென்று தரிசித்து இறைவனை கொண்டாட முடியாதோர் இங்கு எழுந்தரு ளியுள்ள குற்றாலநாதனை தொழுதால், கயிலாயம் சென்ற புண்ணியத்தை பெறலாம்.
பிறவி நோய்க்கு பெருமருந்தாக விளங்குகின்றார் சிவபெருமான். இங்குள்ள அருவிகளில் நீராடும் பக்தர்கள், மனதை ஒருமித்து சிவனை தியானித்தே புனித நீராட வேண்டும். ஏனெனில் அருவியின் பாறைகளில் சூரியன் உள்ளிட்ட தேவர்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் உறைகின்றன. இங்கு ள்ள சித்திர சபைக்கு நவநாயகர்கள் அனுதினமும் எழுந்தருளி ஆராதனை செய்கின்றனர்.

‘‘நவகோளும் நாயகரும் நித்யப்
படி தொழுதேத்துஞ்சபை -
அருவிப்பாறை தன்னிலுறை லிங்க
வடிவெல்லாம் தேவரேத்திய திருக்
கூடக்கிரி தமை தொழுவார்
பிறவாரே’’

-என்கின்றார், கோரக்கர். பிறவிப் பிணி அறுக்கும் தீர்த்தத் தலமிது.

‘‘சிவத்துரோகந் தீர்த்த புரமண்டியோர்
பிணி யறுபட பாரீர் - பாரில்
திரவியமுடனே சவுபாக்யமது பல
வேந்தி நீடு வாழ வரம் யீவனிக்
குற்றலிங்கனே’’

-எப்படிப்பட்ட குற்றங்கள் புரிந்தபோதும் மன்னிக்க கூடியவர் இந்த குற்றாலிங்க நாதர்.

‘‘ஆதிசக்தி குழல் மொழியாள்
அருகிருந்து காக்க,
வலிப்போடு நாடி நரம்பு
ரோகமோடும் பாரு. அட்டமட்ட
மென்றவரி வந்த பீடத்தே
சங்கரனும் பராசக்தி தமை கண்
டேத்திய புண்ணிய சண்பக காடு
இது கயிலாயமே’’

-என புலிப்பாணி சித்தர் பேசுகின்றார். பாஷாணங்கள் வகை நூற்றி எட்டு. இவற்றில் உலகோர் அறிந்தது அறுபத்து நான்கு. இவற்றில் 32 இயற்கை யாய் உருவானது. பிறிது முப்பத்திரண்டும், ஒன்றோடு ஒன்று கூட்டி, செயற்கையாய் உருவாக்கப்படுவது. இதில் நவபாஷாணமே மிகவும் வலுவானது. இந்த நவபாஷாணம் ஆண், பெண் என்ற இரண்டு அம்சங்களால் ஆனது. ஆண் என்பது சிவன் அம்சம். பெண் என்பது சக்தி அம்சம். ரசம் என்பது ஆண் அம்சம். ஆம். குற்றாலிங்கநாதன் ரச அம்சம் கொண்டவர். பெண் அம்சம் கந்தகம். அன்னை குழல்வாய் மொழியாள் கந்தக அம்சம். இவர் களை, சந்தனம், பன்னீர், தேன், போன்ற திரவியங்களால் அபிஷேகித்து அதனை அளவாக, காலக்கிரமத்தில் உட்கொண்டால், கொடிய ரோகங்கள் விலகும் என போகர் பேசுகின்றார்.

‘‘காலசக்கரத்து இட்ட வண்டு
எச்சில் கலந்த சந்தனமிட்டு
பூசி புசிக்க, இதயப்பீடை
யொரு குருதி வழி வந்த
ஒரு நூற்றெட்டு சூடுந்தணிய
சொன்னோம். கோளால் தோ
ன்றுங் கோளாறுங் களையலாகுமே’’

-என்கின்றார். காலச் சக்கரம் என்ற நவகிரகங்களின் சுழற்சி தன்னால் எழும் தோஷம் விலகும். வண்டு எச்சில் என்றால் தேன் என்பதாம். சந்தனம் போன்றவற்றை தடவி தொழுது பின் முறைப்படி குறித்த காலம் உட்கொண்டால், ரத்தத்தில் எழும் பலவித ரோகங்கள் விலகும். நூற்றி எட்டு விதமான உஷ்ணங்கள் தணியும். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளும் அகலும் என்பதாக அமைகிறது. சூரிய தசை, சனி தசை போன்றன சிலருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். மூன்று, ஆறு, எட்டாம் தசையாக வரும் காலத்து ஐந்தருவிகளில் நீராடி, ‘‘குறும்பலா’’ நாதனை தொழுது சிவபூஜை செய்வார், துன்பமும் துயரமும் விலகப் பெற்று பெருஞ் செல்வந்தராய் கீர்த்தி மிகப் பெற்று பெரு வாழ்வு வாழ்வர் என்கின்றார், அகஸ்தியர்.

‘‘மிதக்கும் ஆஸ்தியவர் தம்
மனையிலே - குறும்பலா நாதனை
குறைவின்றி சரணமடைவார்
சித்ரதேவி யருள் கொண்டு
தாளாத் தனத்தோடு பெருங்கீர்த்தி
கொண்டுய்வரே’’

-என்ற பாடலால் அறியலாம். ராகு, கேது பகவான்கள் நேரில் நின்று தொழுது சாப விமோசனம் பெற்ற கோயில், இந்த குழல்வாய் மொழியாள் சமேத குற்றாலநாதர் கோயில்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum