நந்தலாலாவில் மார்கழி ஆராதனை
Page 1 of 1
நந்தலாலாவில் மார்கழி ஆராதனை
மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலம். இவ்வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், பூலோகத்தில் இறைவனை வழிபடுவது ஐதீகம். இதையொட்டி மயிலாப்பூர் டாக்டர். ரங்கா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நந்தலாலா கலாச்சார மையத்தில், கண்ணனுக்கு உகந்த மாதமான தனுர் மாதப் (மார்கழி) பிறப்பான இன்று ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நந்தலாலாவுக்கும், புவன ராஜ கணபதிக்கும் நடைபெறும் இந்நிகழ்ச்சி ஜனவரி 13 வரை நடக்கிறது. இதுகுறித்து நந்தலாலா கலாச்சார மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,
ஸ்ரீ பாலகிருஷ்ணர் பாத பூஜையை சிறுவர், சிறுமியர் செய்தால் அவர்கள் வாழ்வில் வளம் அடைவர். இந்த பூஜை வரும் 22, 29, ஜனவரி 5, 12 (சனிக்கிழமை) மற்றும் இன்று, வரும் 23, 30, ஜனவரி 6, 13 (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.
அத்தர் சேவை: பஞ்சில் அத்தர் தோய்த்து ஸ்ரீ நந்தலாலாவை வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் அதை சேர்க்கும் நிகழ்ச்சி இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சால்வை சேவை: நந்தலாலாவுக்கு இந்த மாதம் எல்லா தினமும் சால்வை சேவை நடைபெறும். இந்த சால்வாயை பிரசாதமாக பக்தர்கள் பெற்று சென்றால் வாழ்வில் வளம் சேரும். இந்த சால்வை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குடை சமர்ப்பணம்: பெருமாளின் கருணையை பெற விரும்புபவர்கள் குடை சமர்ப்பணம் செய்யலாம். இதை செய்ய விரும்புபவர்கள் வரும் 20ம் தேதிக்குள் அலுவலகத்தில் குடைகளை கொடுக்க வேண்டும்.
தினமும் காலை 5-6.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, ஸ்ரீபுவன ராஜ கணபதிக்கு ருத்ராபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு 7.45க்கு பள்ளியறை சேவை நடைபெறும்.
19ம் தேதி தெய்வீக நட்பின் வலிமை சொல்லும் குசேலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
24ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நடைபெறும்.
மார்கழி மாத்தின் அனைத்து நாட்களும், ஆண்டாளுக்காக திவ்ய வஸ்திர மங்கள சேவை நடக்கிறது.
ஜனவரி 11ல் மாலை 6க்கு ஸ்ரீஆண்டாள் அழைப்பு, மாலை மாற்றுதல், திருக்கல்யாணம் நடக்கிறது. இதே நாளில் அனுமத் ஜெயந்தி விழா நடைபெறும்.
வரும் 25ம் தேதி ‘காய் தந்த குரு‘ புத்தக வெளியீட்டு விழா மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் மாலை 3க்கு நடக்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum