தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா

Go down

மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா Empty மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா

Post  ishwarya Sat Feb 16, 2013 1:26 pm

சென்னை - பழவேற்காடு

அந்த நாளில் ஒரு அதிகாலையில் பழவேற்காடு மீனவர்கள் சிலர் கடலுக்குள் சென்று வலை வீசினர். வலையை இழுத்தபோது, ஒரு மரக்கட்டை மட் டும் வலையில் சிக்கியதைக் கண்டனர். மீன் கிடைக்காத கோபத்தில் கட்டையை கடலுக்குள் தூக்கி வீசிவிட்டு வேறோர் இடம் சென்று வலை வீசினர். இம்முறையும் அதே கட்டை வலையில் சிக்கியது. இப்போதும் வெறுப்புற்று, அக்கட்டையை கடற்கரை ஓரமாக வீசிவிட்டு மறுபடியும் வலையை வீசினர். இந்த முறை ஏராளமான மீன்கள் சிக்கின. மகிழ்ச்சிப் பெருக்கில் மீனவர்கள், கடற்கரை ஓரமாய் தாங்கள் வீசியெறிந்த கட்டையை மறந்து வீடு திரும்பினர். ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு கடலில் வந்து சேரும் விறகுகள் மற்றும் கட்டைகளை வெட்டி, வயிற்றுப் பிழைப்பு நடத்தும் விறகு வெட்டியின் கண் களில் பட்டது.

அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து வெட்டுவதற்குத் தோதாக வைத்துக் கொண்டு கோடாரியால் பிளந்தான். கோடாரி வெட்டிய இடத்திலி ருந்து ரத்தம் பீறிட்டு அவன் கண்களில் தெறித்து, அவன் பார்வையை முற்றிலும் இழந்தான். இதனால் அதிர்ச்சியுற்ற அவன் கதறினான். அதே இடத் தில் புரண்டு, புரண்டு அழுதான். விறகு சேகரிக்கச் சென்ற தன் கணவன் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவனது மனைவி கஞ்சிக் கலயத்துடன் அவனைத் தேடி கடற் கரைக்கு வந்தாள். அங்கே அழுது புரண்டு துடிக்கும் கணவனின் அலங்கோலம் கண்டு அதிர்ச்சியுற்றாள். நடந்த நிகழ்ச்சிகளை அவளது கணவன் அழுகுரலுடன் விவரித்தான். அருகில் கிடந்த அந்த மரக்கட்டையை இவளும் உருட்டினாள். புரட்டிப் பார்த்தாள்.

பார்த்தவள் மிரண்டாள். ஆம், கட்டையில் ஒரு தெய்வீகப் பெண்ணின் சாயல் தெரிந்தது! உடனே அக்கட்டையை இறுகப் பற்றிக்கொண்டு, ‘‘ஐயோ, என் கணவனுக்கு பார்வை கொடுங்கள். அவன்தான் என் வாழ்வு, அவனின்றேல் நானில்லை’’ என்று கதறித் துடித்தாள். ஒன்றும் செய்வதறியாமல், அக்கட்டையிலிருந்து ரத்தத்தை எடுத்து கணவன் கண்களின் மீது தடவினாள். என்ன ஆச்சரியம்! கணவனால், பழையபடி அனைத்தையும் பார்க்க முடிந்தது! உடனே அவன் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தான். இருவரும் அந்தக் கட்டையைக் கொண்டு வந்து நடந்தவற்றை அந்த ஊர் மக்களுக்கு விவரித்தனர். அந்த அற்புத நிகழ்ச்சி காட்டுத் தீ போல் வேகமாக பரவியது. பழவேற்காட்டின் சுற்றுப்புறக் கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கடல்பாசி படிந்திருந்த அத்திருவுருவைச் சுத்தம் செய்து குடிசைக் கோயில் அமைத்து வணங்கினர்.

கி.பி.1500ல் போர்ச்சுக்கீசியர்கள் பெருமளவில் தென்னிந்தியாவின் பல இடங்களில் குடியேறினார்கள். அவர்கள் கிழக்கு கடற்கரையில் முதன்முதலாக வந்து இறங்கியது, ஏரியும் பெரிய முகத்துவாரமும் அடங்கிய பழவேற்காடு மீனவ கிராமத்தில்தான். வியாபாரம் செய்ய வந்து தங்கிய போர்ச்சுக்கீசிய மாலுமிகளுக்கு காய்கறி விற்க சிறுவன் ஒருவன் செல்வது வழக்கம். அவன் குடிசைக் கோயிலில் மக்கள் வழிபட்ட அதே தெய்வீக திருவுருவை, போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் கப்பலில், மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கியதைக் கண்டதாக ஊர்மக்களுக்கு அறிவித்தான். மக்கள் போர்ச்சுக்கீசியர்களை அணுகி, தாம் வழிபடும் தெய்வீக உருவத்தின் அற்புத நிகழ்ச்சியை அறிவித்தனர். அவர்களை அழைத்து வந்து, குடிசைக் கோயிலில் அமைந்த திருவுருவைக் காண்பித்தனர்.

அதைப் பார்த்து வியந்த போர்ச்சுக்கீசியர், புயல் காற்றினால் சிக்கிய தங்களது கப்பலிலிருந்து அடித்து வரப்பட்டதுதான் அந்த தெய்வீக தேவமாதா சுரூபம் என்று கூறி, அந்த அன்னையின் திருவுருவத்திற்கு சந்தோஷ மாதா என பெயரிட்டனர். கி.பி.1515ம் ஆண்டு மாதாவுக்கு சிற்றாலயம் எழுப்பினர்; அன்னை மரியாளுக்கு விழாவும் எடுத்தனர். கி.பி.1515ல் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில், கத்தோலிக்க மக்களிடையே முதல் குருவாக பணியாற்றியவர் ஃபாதர் அந்தோணியோஜில். இவர் 1521ல் கிறிஸ்தவர்களை திருயாத்திரையாக மயிலாப்பூருக்கு அழைத்து வந்ததாகவும் புனித தோமையார் கல்லறையில் திவ்ய நற்கருணை திருவிழாவின்போது திருப்பலி நிறைவேற்றியதாகவும் பதிவேட்டிலிருந்து அறியலாம்.

டச்சுக்காரர்கள் காலத்தில் 17ம் நூற்றாண்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். போர்ச்சுக்கீசியர்கள், தம் நாட்டு கலை நுணுக்கத்துடன் உரு வாக்கிய மரத்தால் ஆன திருப்பலி பீடம் ஊர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. பொன் முலாம் பூசப்பட்டு அழகுடன் திகழ்ந்த திருப்பலி பீடத் தை அழிக்க மனம் வரவில்லை. ஆகவே, திருப்பலி பீடம் இருந்த இடம் தவிர ஆலயத்தின் ஏனைய பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட ஆலயம், மகிமை மாதா ஆலயம் என அழைக்கப்பட்டது. இன்றும் அழியா சின்னமாக, அன்னையின் திருவுருவம் தாங்கி, திருப்பலி பீடம் பாதுகாக்கப்பட்டு, வந்தோரைக் கருணையுடன் வரவேற்கின்றது.

17ம் நூற்றாண்டில் பழவேற்காடு, பன்னாட்டு வியாபாரத் தலமாக விளங்கியது. வியாபார போட்டி காரணமாக போர்ச்சுக்கீசியர்களுக்கும், டச்சுக்காரர் களுக்கும் போர்கள் பல நடைபெற்றன. இதற்கிடையில் இவ்விடத்தின் சிறப்பு அறிந்து ஆங்கிலேயர்கள் படையெடுத்தனர். மரக்கலங்கள் வந்து செல்ல ஏதுவாக கி.பி. 1859ம் ஆண்டு கலங்கரை விளக்கம் ஒன்றையும் அமைத்தார்கள். பிறகு வியாபாரத்தை எளிதாக்கவும் பெருக்கவும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவிலிருந்து தமிழ்நாட்டின் மரக்காணம் வரை உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்காக பக்கிங்ஹாம் கால்வாயை அமைத்தார் கள். மரக்கலங்கள் வந்து தங்கவும் மாலுமிகளிடம் சுங்கம் வசூலிக்கவும் துறைமுகத்தை ஏற்படுத்தி அதற்கு தோணிரேவ் என்று பெயரிட்டனர். அந்த இடம் இன்னும் தோணிரேவ் என்றே அழைக்கப்படுகிறது.

கி.பி.1762ம் ஆண்டு முதல் ஞானஸ்நானம், திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு இன்றளவும் இத்த லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 29.3.1882 அன்று பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயம் தனிப்பங்கானது. அன்று முதல் இன்றுவரை இவ்வாலயம் திருயாத்திரைத் திருத்தலமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. முதல் பங்கு தந்தையாக ஃபாதர் அந்தோணியோ பிரான்சிஸ்கோ கமில்லோ டி பத்ரோகினியோ நியமிக் கப்பட்டார். இத்திருத்தலமே சென்னை-மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமாகும். முன்பெல்லாம் குருக்கள், சென்னை- ராயபுரம் மற்றும் எண்ணூர் பங்குத் தளங்களிலிருந்து, சாலை வசதியில்லாததால், பக்கிங்ஹாம் கால்வாயில் படகுகள் மூலம் வருவார்கள். இவ்வூரில் திருப்பலி நிறைவேற்றி அருட்சாதனங்களை மக்களுக்கு வழங்கினார்கள்.

பின்னர் இப்பகுதி மக்களின் பெருமுயற்சியால் ஆட்சியாளர்கள் உதவியுடன் கி.பி.1957ல் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இக்கோயிலின் அன்னை பல மகிமைகளை நிகழ்த்தியிருக்கிறார். நகர வாழ்க்கையின் ஆரவாரங்களின்றி அலைகடலின் தாலாட்டில் அமைதியான சூழ்நிலையில் உள்ள பழவேற்காட்டில் கோயில் கொண்டுள்ள அன்னை மகிமை மாதாவை தரிசிப்பது மனதிற்கு அமைதியையும், நம்பிக்கையையும் தரும் என்பது அன்னையின் அருளை அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அமைந்திருக்கும் பழவேற்காட்டிற்கு சென்னையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 044-27976460.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum