சுசீந்திரத்தில் 11-ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா
Page 1 of 1

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு இந்த ஆண்டு ஜெயந்தி விழா வரும் 10ம் தேதி தொடங்குகிறது. 11ம் தேதியன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது.
காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்யும் பணி ஆலய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை சமபந்தி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாணுமாலய சுவாமி கோயில் கலையரங்க மைதானம், எஸ்எம்எஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் கிரேந்தி மற்றும் வாடாமல்லி பூக்கள் தவிர இதர பூக்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையுடன் ஜெயந்தி விழா நிறைவு பெறுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாமக்கல் அருள் மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» 30ம் தேதி முதல் சபரிமலை உத்திரம் விழா

» திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழா; டிசம்பர் 8-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum