தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...

Go down

மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...  Empty மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...

Post  meenu Fri Feb 15, 2013 5:35 pm

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த நேரம் தூங்கினால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், உயர் ரத்த அழுத்தம் உடைய 1,255 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. சராசரியாக 50 மாத காலத்திற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 99 பேருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டதோடு, சிலர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

இரவில் ஏழரை மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்களில் 68 சதவீதம் பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட அளவுக்கு தூங்கியவர்களுக்கு அந்த பாதிப்பு அவ்வளவாக இல்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தூக்கம் குறைவதால் உடலின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது இதயக் கோளாறுக்கு வித்திடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum