ஏசியவருக்கே சொந்தம்!
Page 1 of 1
ஏசியவருக்கே சொந்தம்!
ஒரு கிராமத்தில் ஒரு வயதான திறமைமிகுந்த போர்வீரர் இருந்தார். அவர் மிகவும் வயதானாலும் எத்தகைய வீரரையும் தோற்கடிப்பதில் வல்லவர். அவருடைய புகழானது அந்த ஊரைச் சுற்றியுள்ள இடங்களிலும் பரவியது. அத்தகைய திறமைமிக்க வீரரிடம் சண்டை கற்க ஆர்வமாய் பல மாணவர்களும் வெகுதூரத்திலிருந்து வந்தனர்.
ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு இளம் போர்வீரன் வந்தான். அவனுக்கு "நான்தான் பெரிய பலம் வாய்ந்தவன். என்னை தோற்கடிக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை" என்ற எண்ணம் அவன் மனதில் இருந்தது. அந்த நிலையில் அவனுக்கு அந்த வயதான போர்வீரரைப் பற்றி தெரிய வந்தது. அப்போது அவன் அந்த வயதான போர் வீரரைத் தோற்கடிக்கப் போகும் முதல் நானாகவே இருப்பேன் என்று உறுதியாக இருந்தான். அந்த இளம் வீரரின் சிறப்பு என்னவென்றால், அவன் எதிராளியின் பலவீனத்தை அறிந்து அவர்களை மின்னல் வேகத்தில் எளிதில் தோற்கடிப்பதில் வல்லவன்.
இதை அறிந்த வயதான வீரரின் மாணவர்கள், அவனுடன் சண்டையிட்டு தோற்றனர். அதனால் அந்த மாணவர்கள் அவர்களது குருவான அந்த வயதான வீரரிடம், அவனுடன் சண்டையிடுமாறு வேண்டுகோள் இட்டனர். அவர்களது குருவும் அவர்களது வேண்டுகோளுக்கு சம்மதித்து, களத்தில் இறங்கினார்.
அப்போது அந்த இளம் வீரர், வயதானவரை தோற்கடித்து அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், கையில் இருக்கும் வாளை வைத்து வேகமாக சுழற்றினான். பின் அவர் மீது மண்ணை தூவி, முகத்தில் எச்சிலைத் துப்பி, வெகு நேரம் மரியாதையின்றி சாபமிட்டு அவமதித்தான். ஆனால் அந்த வயதான வீரரோ எதுவும் சொல்லாமல், அமைதியாக இருந்தார். பின் அந்த இளம் வீரன், இறுதியில் நானே வென்றேன் என்று கூறி சென்றுவிட்டான்.
இதைப் பார்த்த அவர்களது மாணவர்கள் ஒன்று புரியாதவர்களாய் அவரிடம் சென்று, "ஏன் இந்த அவமானத்தை ஏற்றீர்?, அவனை ஏன் இங்கிருந்து செல்ல அனுமதித்தீர்?" என்று கேட்டனர்.
அதற்கு அந்த வயதான வீரர் "உங்களுக்கு ஒருவர் பரிசைக் கொடுத்து, அதை நீங்கள் ஏற்கவில்லை என்றால், அந்த பரிசு யாரைச் சேரும்" என்று கூறி, ஆகவே அவன் என்னை ஏசியதை நான் ஏற்கவில்லை. அவன் என்னைப் பார்த்து அந்த வார்த்தைகளை சொன்னாலும், அந்த வார்த்தைகள் அந்த இளம் வீரனையே சேரும். அதனால் நீங்கள் இதற்கு கவலைப்படத் தேவையில்லை என்று கூறி மாணவர்களுக்கு புரிய வைத்தார்.
இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், "யார் நம்மை எந்த வார்த்தையில் ஏசினாலும், அந்த வார்த்தையை நாம் ஏற்றுக் கொண்டாலே நமக்குச் சொந்தம். இல்லையென்றால் ஏசியவருக்கே சொந்தம்" என்பதை இக்கதையின் மூலம் நன்கு அறியலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறைவனுக்கு உலகமே சொந்தம்
» இறைவனுக்கு உலகமே சொந்தம்
» அம்மா என்றொரு சொந்தம்
» சந்தானம் திருடிய பாக்யராஜ் கதைக்கு சொந்தம் கொண்டாடும் ‘புதிய வடிவேலு’!
» புலித்தலை எனக்குத்தான் சொந்தம்! சீமானை கண்காணிப்பீர்! சிவசேனா மாநிலத்தலைவர் பொலிஸில் புகார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum