கட்டுக்கொடி இலையின் மகத்துவம்
Page 1 of 1
கட்டுக்கொடி இலையின் மகத்துவம்
கட்டுக்கொடி இலையுடன், மாம்பருப்பும் சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து 2 வேளை குடித்து வர பேதி உடனே நிற்கும். (கஞ்சி ஆகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும்.) கட்டுக்கொடி வேர், ஒரு கைப்பிடியளவுடன், சுக்கு ஒரு துண்டு, மிளகு 4 சேர்த்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு மணிக்கு ஒரு முறை 50 மில்லி வீதம் குடித்து வர வாதவலி, வாத நோய், கீல் நோய் குணமாகும். கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி குணமாகும். கட்டுக்கொடியிலையைப் பாலில் அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர விந்து கட்டும். இடுப்பு வலி நீங்கும். கட்டுக்கொடி சமூலத்தை அரைத்து எலுமிச்சம்பழ அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மலக் கழிச்சல், பேதி நிற்கும். நீர்த்த இந்திரியம் கட்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum