மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள்
Page 1 of 1
மன அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள்
பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே வேலை செய்யும் ஊழியர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களது உடல்நிலையும் மோசமாகிறது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
webdunia photo
WD
அமெரிக்காவில் நிதி நெருக்கடி தொடங்கியது முதல் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் எஞ்சியுள்ளவர்கள் வேலை பறிபோய்விடுமோ அல்லது தங்களது நிறுவனத்தை மூடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அவர்களது மனநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பற்றி மிச்சிகன் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆய்வு நடத்தியது. அதில், நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க தொழிலாளர் சந்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளி - தொழிலாளி இடையேயான இணைப்புகள் பலவீனம் அடைந்து விட்டன. வேலை போகும் அச்சத்தில் ஊழியர்கள் பலரும் உள்ளனர்.
வேலை இழந்தவர்களைப் பார்த்த மற்றவர்களுக்கு தங்கள் வேலை பற்றிய அச்சம் அதிகரித்து விட்டது. அவர்களில் பலர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு மனநிலையே காரணம். வேலை பற்றிய அச்சம், ஊழியரின் உடல்நலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
வேலையில் பாதுகாப்பின்மையால் ஊழியர்கள் மது, புகைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. இவையும் அவர்கள் உடல்நல பாதிப்புக்கு காரணமாகிறது. குடும்ப எதிர்காலம், பணத் தேவை ஆகியவை குறித்து நிரந்தர வேலையில்லாத ஊழியர்கள் மனதில் கேள்விக் குறி எழுகிறது. இதுவும் அவர்கள் ஆரோக்கியம் கெடக் காரணமாகிறது.
ஆய்வில் பங்கேற்ற சுமார் 1,700 பேரில் 18 சதவீதத்தினர் வேலை பறிபோகும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை சோதனை செய்ததில் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சளிக்கட்டு குணமாக எளிய வழி
» வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
» எளிய வீட்டு வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum