செல்லப்பிராணிகளுக்கு முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்!!!
Page 1 of 1

நாய்கள் 'மொசு' 'மொசு' என்று இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் அப்படிப்பட்ட நாய்களையே அனைவரும் விரும்பி வாங்குவர். ஏனென்றால் அது பார்க்க கொலுக் மொலுக் என்று அழகாக இருக்கும். ஆனால் அந்த நாயிடம் ஒரே ஒரு பிரச்சனை மட்டும் உள்ளது. அதுதான் அவற்றின் முடி உதிர்வது. நாய்கள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். அப்போது அதன் முடி வீடு முழுவதும் உதிர்ந்து இருக்கும். சில சமயங்களில் அந்த முடி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படி நாய்களின் முடி உதிர்வதைத் தடுக்க சில வழிகள் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாமா!!!
1. நாய்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க தினமும் சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பானது தங்கள் செல்ல நாய்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தினமும் அப்படி தூய்மை செய்தால் தேவையற்ற முடி வெளிவருவதுடன், முடியானது வலுவடையும்.
2. செல்ல நாய்களுக்கு சீவும் முன், அதன் மேல் ஆன்டி-ஸ்டாடிக் ஸ்ப்ரே (anti-static spray) தெளித்துப் பின்னர் சீப்பை போடவும். இல்லையென்றால் சீப்பானது முடியில் சிக்கி முடி உதிர்வதை அதிகப்படுத்தும். இதை உபயோகிப்பதால் முடியானது சிக்கடையாமல் ஈஸியாக வந்துவிடும்.
3. செல்லங்களை சுத்தம் செய்யும் போது, பெரும்பாலும் விரல்களை பயன்படுத்தி முடிகளை அகற்றினால், அவற்றிற்கு சுசெசெகமாக இருப்பதோடு, அதன் முடி வீடு முழுவதும் பரவாமல் இருக்கும். இதனால் அடுத்த முறை அவற்றை சுத்தம் செய்யும் போது அதிகமாக முடி கொட்டாது.
4. செல்லங்களை சுத்தம் செய்யும் போது சீப்பைக் கொண்டு சுத்தம் செய்த பின், கைகளுக்கு நாய்களை சுத்தம் செய்வதற்காகவே விற்கப்பட்டுள்ள கையுறை அணிந்து ஒரு முறை சுத்தம் செய்தால் எஞ்சிய உதிர்ந்த முடியும் வந்துவிடும். மேலும் நாய்களுக்கு இதைக் கொண்டு செய்தால் அதற்கு ஒரு சிறந்த மசாஜ் மாதிரி இருக்கும், அதற்கும் மிகவும் பிடிக்கும்.
5. மேலும் நாய்களுக்கு குளிப்பாட்டும் போது, அதற்கு பயன்படுத்தும் ஷாம்புவானது அதன் முடியில் சிறிது எண்ணெய் பசை உள்ள ஷாம்புவாக பயன்படுத்தவும். இது அதன் முடி உதிர்தலைத் தடுக்கும்.
இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், நம் செல்ல நாயும், வீடும் சுத்தமாக இருக்கும்!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்!!!
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்.
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்.
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum