குட்டீஸ்க்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!
Page 1 of 1
குட்டீஸ்க்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!
விதவிதமாய் வீட்டில் பொம்மைகளை வாங்கிக்குவித்தாலும் கூட விளையாட செல்லப்பிராணிகள் வேண்டும் என்பது குழந்தைகளின் விருப்பம். நாயோ, பூனையோ ஏதாவது வளர்ப்பு பிராணிகளை வைத்துக்கொஞ்சுவது குட்டீஸ்க்கு விருப்பமானது. எனவே உங்கள் பட்டுக்குட்டிகளுக்கு ஏற்ற வளர்ப்பு பிராணிகளை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுங்கள் அது அவர்களின் உளரீதியான வளர்ச்சிக்கு எற்றது என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன வளர்ப்பு பிராணிகளை வாங்கித்தரலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
செல்ல பக்
பக் வகை நாய்க்குட்டிகள் குழந்தைகளுக்கு ஏற்றவை. அன்பாய், பாசமாய் பழகும் தன்மை கொண்டவை. இந்த நாய்க்குட்டிகளை வாங்கிக்கொடுத்தால் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்.
அணில், முயல்
ஹாம்ஸ்டர் எனப்படும் அணில்வகையைச் சேர்ந்த விலங்கு செல்லப்பிராணியாய் வளர்ப்பதற்கு ஏற்றது. அதன் அழகான தோற்றம் உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். சின்ன விலங்காய் இருப்பதால் அதிக இடம் தேவையில்லை.
முயல்குட்டி செல்லப்பிராணியாய் வளர்ப்பதற்கு ஏற்றது என்றாலும் வீட்டிற்குள் வளர்ப்பதற்கு சிரமம். எனவே தோட்டங்கள் இருந்தால் அதில் குடில் அமைத்து கவனமாய் வளர்க்கவேண்டும் இல்லையெனில் தொற்றுநோய் பரவிவிடும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
வண்ணமீன்கள்
குழந்தைகளுக்கு வண்ணமீன்களை வாங்கித்தருவது நல்லதுதான். அதிலும் தங்கநிற மீன்கள் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானவை. சிறிய தொட்டி வாங்கி அதில் மீன்களைப்போட்டு வளர்க்கலாம் இதனால் குழந்தைகளின் மகிழ்ச்சி இருமடங்காகும்.
பூனைக்குட்டிகள்
ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு பூனைக்குட்டி ஏற்ற செல்லப்பிராணி. எப்பொழுது பார்த்தாலும் காலைக்கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும். எனவே குழந்தைகளுக்கு செல்லப்பிராணிகளை வாங்கிக்கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு பாதுகாப்பானதாக வாங்கிக்கொடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லீவு நாளில் குட்டீஸ்க்கு ஏற்ற கோடை கால விளையாட்டுக்கள்!
» குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்கா?
» குட்டீஸ்க்கு கதை சொல்லுங்க கற்பனை வளரும்!
» கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!
» குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum