கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!
Page 1 of 1
கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!
Fruits for Children
பழங்கள் சாப்பிடக்கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் தவிர்த்துவிடுகின்றனர். இனி கவலைவேண்டாம் கோடை வந்துவிட்டது. குழந்தைகளின் உடலில் உஷ்ணம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு பழங்களை உண்ணக்கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
கோடைகாலத்தில் தர்பூசணி, கமலா ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் அதிக அளவில் கிடைக்கும். இவற்றின் சுவையை படிப்படியாக அறிமுகப்படுத்தலாம். வெள்ளரிக்காயை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இனிப்பு சுவை பிடித்த குழந்தைகளுக்கு தேன் ஊற்றியும், காரச் சுவை பிடித்தவர்களுக்கு உப்பும், மிளகு தூளும் தூவிக் கொடுக்கலாம்.
நீர்ச்சத்தினை தக்கவைக்கும்
ஆரஞ்சு பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் எனவே உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம்.
தர்பூசணி பழத்தை மதிய நேரத்தில் உண்ணத் தரலாம். இது உடலில் தண்ணீர் சத்தினை தக்கவைக்கிறது.
திராட்சைப் பழம் உடம்பில் நீர் சத்தினை தக்கவைக்கிறது. காலை, மதிய உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில் திராட்சைப் பழத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மாம்பழத்தை வெறும் பழமாக கொடுப்பதை விட பாலோடு சேர்த்து மில்க் ஷேக்காக கொடுக்கலாம்.
இளநீர் பருகக்கொடுப்பது குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினையை தீர்க்கும். வயிற்றில் புண்கள் எதுவும் இருந்தாலும் குணமாகும். வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கக் கூடாது.
கண்கவர் வடிவங்கள்
குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள். பழச்சாறுகளைக் கொடுப்பதற்கு பதிலாக பழங்களாக உண்பதற்கு பழக்கப்படுத்துங்கள். இதனால் நார்ச் சத்தும் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரைச் சேராமல் தடுக்கலாம்.
தண்ணீர் கொடுங்கள்
குழந்தைகளை ஊட்டச்சத்தான உணவை உண்ணுமாறு நீங்கள் எந்த அளவிற்கு வற்புறுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதையும் ஊக்கப்படுத்துங்கள். சுத்தமாக, காய்ச்சி வடிகட்டப்பட்ட நீர் குழந்தைகளுக்கு எப்போதும் கொடுங்கள். சாப்பிட்ட பிறகு முழுதாக ஒரு டம்ளர் நீராவது அவர்கள் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.
பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு நன்மையை அளிக்கும். ஆனால் தற்போது விற்பனையில் பழச்சாறு என்று கூறி விற்கப்படும் பல பொருட்களில் எந்த பயனும் இல்லை.அதில் கெடுதலான விசயங்களே உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று.
வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் பழச்சாறு தவிர்த்து கடைகளில் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குட்டீஸ் புஷ்டியா வளர மசித்த உணவு குடுங்க
» குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்?
» கோடையில காரமா சாப்பிடாதீங்க ! ஹைபர் அசிடிட்டி வரும் !!
» குட்டீஸ்க்கு வயிற்றில் பிரச்சினையா? இஞ்சி மிட்டாய் கொடுங்க!
» குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்கா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum