வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!
Page 1 of 1
வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!
இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் நகைகளை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அவை கறுப்பாக மாறி விடுகின்றன. இதற்கு காரணம் அவற்றின் தரத்தில் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெள்ளிப் பொருட்களைப் எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பாலீதின் கவர்
மரப்பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அப்படி மரப்பெட்டியில்தான் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் வெள்ளிப் பொருளை பாலித்தீன் கவரில் போட்டு நன்கு மூடி வைக்கவும்.
நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செய்தித்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்களோ படும்படி வைக்க வேண்டாம்.
காற்றுப் படக்கூடாது
ஒவ்வொரு முறையும் வெள்ளி நகையை பயன்படுத்தும் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பயன்படுத்திய பிறகு அதனை நன்றாக துடைத்து பின்னர் பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும்.
பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சுத்தமான நீரில் கழுவி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.
மங்கிப்போகும்
ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.
பூஜை சாமான்கள்
குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தலை பாதுகாக்க 'டாப்'பான ஐடியா!
» பளிங்கு பாத்திரங்கள் பள பளப்பாய் மின்ன...
» தோட்டத்துல பாதை அமைக்க சில ஐடியா!!!
» வெள்ளிப் பனிமலையின் மீது
» வெள்ளிப் பிள்ளையார் விரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum