வெங்காயம், பூண்டு நாற்றத்தை ஏற்படுத்துதா...?
Page 1 of 1

Ways to get rid of garlic and onion smell
உணவுக்கு மிகுந்த ருசியைத் தருவது வெங்காயம் மற்றும் பூண்டு. அத்தகையது உணவுக்கு மட்டும் ருசியையும், மணத்தையும் தராமல், அதை சாப்பிடுவதால் வாயிலும், உடுத்தும் உடையிலும், சமைக்கும் பாத்திரங்களிலும், அந்த மணமானது நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சங்கடமாக இருக்கிறது. இதனை நம்மால் சாப்பிடாமலும் இருக்க முடியாது. இத்தகைய நாற்றத்தை போக்க சில வழிகள் உள்ளன. அது என்னவென்று சற்று படித்துப் பாருங்களேன்...
நாற்றத்தைப் போக்க இதோ சில டிப்ஸ்...
கைகளில் இருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் கைகளில் அந்த மணமானது நீண்ட நேரம் இருக்கும். அப்போது உள்ளங்கைகளில் சிறிது உப்பை வைத்து 2 நிமிடம் தேய்த்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். வேண்டுமென்றால் உப்பை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, கைகளில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் நாற்றமானது போவதுடன், சருமத்திற்கும் நல்லது.
2. தக்காளி ஜூஸில் கைகளை 4 5 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
3. எலுமிச்சை பழத்துண்டு சிறிது எடுத்து கைகளில் தேய்த்தால், அந்த நாற்றமானது போய்விடும்.
பாத்திரங்களில் இருந்து போக...
1. பாத்திரங்களை டிடர்ஜன்ட் சோப்பால் கழுவி, பின் சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து கழுவவும். இதனால் பாத்திரங்களில் இருந்து நாற்றமானது போகும்.
2. டம்ளர்களில் இருந்து வெங்காயம், பூண்டு நாற்றம் அவ்வளவு சுலபமாக போகாது. அதற்கு சிறிது எலுமிச்சை பழத்துண்டால் தேய்த்து, பின் டிடர்ஜன்ட் சோப்பால் அல்லது பேக்கிங் சோடாவால் கழுவலாம்.
வாயிலிருந்து போக...
1. வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளை உண்பதால் வாயில் இருந்து வரும் நாற்றத்தைப் போக்க, உண்டப் பின் பேஸ்ட்டால் கழுவினால் நாற்றமானது போய்விடும்.
2. உணவு உண்டப் பிறகு சிறிது கடுகு சாப்பிட்டால், வாயில் இருந்து வரும் நாற்றத்தை தடுக்கலாம்.
3. வேண்டுமென்றால் சாப்பிட்டப் பின் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், வாயானது புத்துணர்ச்சியுடன், நாற்றம் இல்லாமல் இருக்கும்.
உடைகளில் இருந்து போக...
1. உடைகளில் இருந்து வெங்காயம் மற்றும் பூண்டு நாற்றத்தை தடுக்க எலுமிச்சை சிறந்தது. முதலில் துணியை நனைத்து, பின் 20-25 நிமிடம் எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்து அலசினால், உடைகளில் இருந்து நாற்றமானது போய்விடும்.
2. மற்றொன்று பேக்கிங் சோடாவால் நாற்றத்தை போக்குவது. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை, அரை வாளி தண்ணீரில் போட்டு, பின் துணிகளை அதில் ஊற வைத்து துவைத்தால் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்
» விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?
» உடல் பருமனால் 'தஸ்ஸ், புஸ்ஸ்..'!- பூண்டு, வெங்காயம் சாப்பிடுங்க!!
» தேவையான பொருட்கள்: நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன் மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப
» வெங்காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum