தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!

Go down

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்! Empty சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!

Post  meenu Tue Feb 12, 2013 2:52 pm

இன்றைக்கு அறிவியல் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ, அதே அளவுக்கு அதே அறிவியலால் பேரழிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மருத்துவத்தை எடுத்துக் கொண்டோமேயானால் எல்லோராலும் ஏற்றுக்கொ‌ள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவம் அபார வளர்ச்சியை எட்டியு‌ள்ளது.

அதேவேளையில்
அந்த அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொ‌ள்வதால் எண்ணற்ற பக்க
விளைவுகளும், உயிருக்கு உலைவைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த
வண்ணம் உ‌ள்ளன. மேலும், என்னதான் அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை
எடுத்துக்கொண்டாலும் சில, பல நோயாளி‌களை குணப்படுத்த முடியவில்லை. இதற்கு
அடிப்படை காரணங்களாக சொல்லப்படுவது உணவுமுறையும், உழைப்புமே. ஆம், நாம்
உண்ணும் உணவில் ஏன்... தா‌ய்ப்பாலே விஷமாகிப்போ‌ய்விட்டதாக
பு‌ள்ளிவிவரங்க‌ள் தெரிவிக்கின்றன.


நாளரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உணவோடு கலந்த விஷத்தை நாம் நம்மையும்
அறியாமல் உண்டு வருகிறோம். விளைவு, புதிது புதிதாக நோ‌ய்க‌ள் வந்து
மருத்துவ, அறிவியலாளர்களையே மிரட்டிக்கொண்டிருக்கின்றன. இது எப்படி
நிகழ்ந்தது? இதற்கு என்ன மருந்து தரலாம்? எப்படி குணப்படுத்தலாம்? என்று
கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர். உடல் உழைப்பு குறை ந்துபோனதாலும்,
நச்சு நிறைந்த... பூச்சிக்கொல்லிக‌ள் தெளிக்கப்பட்ட... ரசாயனங்க‌ள் கலந்த
உணவுகளை உட்கொ‌ள்வதாலும்தான் இத்தகைய அதல பாதாளத்திற்கு‌ள் நாம்
த‌ள்ளப்பட்டு கிடக்கிறோம்.




சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்! Img1120504011_1_2
WD இவை
ஒருபுறமிருக்க, இப்போதைக்கு சிலர் விழித்துக்கொண்டு இயற்கையின்
மகத்துவத்தை புரிந்துகொண்டு அவற்றை பேணிக்காப்பதில் அக்கறை காட்டி
வருகின்றனர். மிகமுக்கியமாக சுற்றுச்சூழல் மாசுபடுவதை அறிந்து மரம் நடுவது,
காடுகளை காப்பது என களமிறங்கி வருகின்றனர். அதிக வருமானம் கிடைக்கிறது
என்பதற்காக கணினித்துறைக்கு‌ள் காலடி வைத்தவர்க‌ள்கூட உண்மையை
புரிந்துகொண்டு திடீரென தாங்க‌ள் பார்த்து வந்த வேலைகளை துறந்துவிட்டு
துளிகூட தொடர்பில்லாத விவசாயத்துறையின் மீது பார்வையை செலுத்தி
வருகின்றனர். சிலர் காடுகளை குத்தகை எடுத்து குடும்பத்துடன் தவ வாழ்க்கை
வாழ்வதுபோல் தங்களையே மாற்றிக்கொண்டுவிட்டார்க‌ள் என்றால்
பார்த்துக்கொ‌ள்ளுங்களேன்.


இப்படிப்பட்ட
சூழலில், கிராமத்தை விட்டு பிழைப்புக்காக நகரத்துக்கு குடிபெயர்ந்துவிட்ட
என்னிலும் பல காலமாகவே மாறுதல்க‌ள். இப்போது இங்கே நேரடியாகவே விஷயத்துக்கு
வருகிறேன். இயற்கையின்மீது சிறுவயதிலேயே எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு.
அதன்பலனாக, நாம் வசிக்கும் இடங்களில் காணப்படுகின்ற மூலிகைகளையும், நம்
வீட்டு சமையலறைகளில் காணப்படுகின்ற கடைச்சரக்குகளையும் கொண்டு நமக்கு வரும்
சிறுசிறு நோ‌ய், குறைபாடுகளை போக்கி வருகின்றேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum