விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்
Page 1 of 1

Table
நம் இல்லத்திற்கு வரும் அனைவரும் அமர்ந்து உரையாடும் இடம் வரவேற்பரைதான். மிக முக்கியமான அந்த இடத்தினையும், அங்குள்ள பொருட்களையும், அசத்தும் விதமாக அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக வரவேற்பரையில் வைக்கப்பட்டிருக்கும் மேஜை அலங்காரம் முக்கியமானது. இது அனைவரின் கவனத்தையும் கவரும் என்பதால் பிரத்யேக சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே உள்அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..
மணம் மயக்கும் மலர்கள்
மேஜையின் மீது சிறிய அளவிலான கிண்ணம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மலர்களைப் போட்டு வைக்கலாம். வண்ணமயமான இந்த மலர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சிறிய பூ ஜாடியை வைத்து அதில் பல வண்ண மலர்களால் அலங்கரிப்பது அறைக்கு பளிச் தோற்றத்தை ஏற்படுத்தும். மேஜையின் வடிவத்திற்கு தக்கவாறு ஏற்ற மலர்களால் அலங்கரிப்பது அழகை அதிகரிக்கும்.
போன்சாய் மரங்கள்
தற்போது போன்சாய் மரங்களினால் அலங்கரிப்பது அதிகரித்து வருகிறது. எனவே மேஜையின் நடுவே பூக்களைக் கொண்டும் , போன்சாய் மரங்கள் மூலமும் அலங்கரிக்கலாம். காய்கறிகள், பழங்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம், அது வரவேற்பரையின் அழகை அதிகரிக்கும். வருபவர்கள் எடுத்த உண்ண வசதியாகவும் இருக்கும்.
மன அமைதி தரும்
மேஜையின் நடுவில் மெழுகுவர்த்தியால் அலங்கரிப்பது, எழிலோடு, ஸ்டைலாகவும் இருக்கும். மெழுகுவர்த்தி ஏற்றுவது மனதிற்கு அமைதியை தரும். அதுவும், வரவேற்பு அறையின் மேஜையில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியை மாலை நேரத்தில் அதனை ஏற்றி வைப்பது அழகோடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.
புத்தகங்கள், நாளிதழ்கள்
புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவைகளை மேஜை மீது அழகாக அடுக்கி வைப்பது வரவேற்பறையின் அழகினை அதிகரிக்கும். படிகங்களினால் ஆனா பொருட்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம்.
பாரம்பரியப் பொருட்கள்
மேஜை மீது பாரம்பரியம் மிக்க விரிப்புகளை பயன்படுத்துவது அழகை அதிகரிக்கும். சணல் மேஜை விரிப்பை பயன்படுத்துவது அழகாக இருப்பதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும். வெண்கலத்தான் ஆன சிலைகளை மேஜை மீது அலங்கரிப்பது பாரம்பரியமாக இருப்பதோடு அழகை அதிகரிக்கும். ஆனால் அது ஸ்டைலுக்கு மட்டுமே ஏற்றது.
எளிமையே அழகு
மேஜையில் இடம் காலியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் கொண்டு நிரப்பவேண்டாம். எளிமையான சிறிய அளவிலான பொருட்களே அழகே அதிகரிக்கும். உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் உள்அலங்கார நிபுணர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விருந்தினர்களை கவரும் திரைகள் ரசனையாக இருக்கட்டும்!
» ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி
» ஒரு வீட்டின் கதை
» ஆண்டாளுக்கு வரவேற்பு
» உடை அலங்காரம் உடை அலங்காரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum