விருந்தினர்களை கவரும் திரைகள் ரசனையாக இருக்கட்டும்!
Page 1 of 1

Home Decorating
வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வரும் தூசிகளையும், தேவையற்ற பூச்சிகளையும் ஜன்னலுக்கு வெளியே வடிகட்டி அனுப்பிவைப்பவை திரைகள். ஆரோக்கியத்தோடு அழகையும் அதிகரித்து காட்டுபவை. இவற்றை வீட்டின் நீள அகலத்திற்கு ஏற்பவும், சுவற்றின் நிறம், சுவற்றிலுள்ள கலைப்பொருட்கள், மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அமைக்கவேண்டும். அழகான தொங்குதிரைகளை ரசனையாக தேர்ந்தெடுக்க உள் அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
பட்ஜெட் போடுங்க
தொங்கு திரைகளைத் தேர்வு செய்யும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலில் சிந்திக்கவேண்டியது நமது பட்ஜெட் எவ்வளவு? மேலும் நாம் எவ்வளவு காலம் இந்தத் திரைகளைப் பயன்படுத்துவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வது நலம். முழு நீஅளமாக இருக்கவேண்டுமா, ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கவேண்டுமா, விலை அதிகமான துணியா அல்லது சாதாரண துணியா என்பதை முடிவு செய்யவேண்டும்.
விருந்தினர்கள் அடிக்கடி வருகின்றனர் என்றால் அவர்களை கவர தங்கள் வீடுகளில் ஆடம்பரமான தொங்கு திரைகளை அமைக்கலாம். அல்லது சாதாரணமாக மறைக்க மட்டுமே போதுமானது என்றால் சாதாரணத் திரைகளை வாங்கலாம்.
டிசைன், ஸ்டைல்
வீடுகளின் அமைப்பைப் பொருத்து டிசைன், ஸ்டைல் ஆகியவற்றைத் தீர்மானிக்கவேண்டும். நிறம் அவசியமாக பரிசீலிக்கப்படவேண்டிய ஒன்று. சுவரின் நிறம், தரையின் நிறம், ஃபர்னிச்சர் நிறத்திற்கு ஒத்து வரும் திரைகளே அழகு சேர்ப்பதாக அமையும்.
வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான நிறம், ஸ்டைலில் தொங்கு திரை தேர்வு செய்பவர்கள் அரிது. வரவேற்பரை, உணவருந்தும் அறை, படுக்கை அறை, என்று அறைகள் அதிகம் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே தொங்கு திரையைத்தான் தேர்வு செய்பவர்கள் அதிகம். அப்படி எடுத்தாலும் எல்லா அறைக்கும் பொதுவாக நன்றாகத் தோன்றும் துணியைத் தேர்வு செய்யவும்.
ஓவியங்கள் அழகூட்டும்
வீடானது நவீன காலக் கட்டிடம் என்றால் பிளைனாகவோ அல்லது நவீனச் ஓவியங்கள் தீட்டப்பட்ட திரைகளை வாங்கலாம். அதேசமயம் பழங்கால கட்டிடங்கள், உயரமான மேற்கூரைகள் உள்ள வீடு என்றால் பழங்கால ஓவியங்கள் உள்ள தொங்கு திரைகளை வாங்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் துணியின் மாதிரியை வாங்கி வீட்டின் சுவரில் வைத்துப் பார்க்கவும். இதன் மூலம் நல்ல திரைகளை தேர்ந்தெடுக்க முடியும்.
உங்கள் ஜன்னல் கம்பிகள் என்ன டிசைனில் இருக்கிறது என்பதைப் பொறுத்து திரைகளை வாங்கவும், ஜன்னல் கம்பிகள் பூ டிசைனில் இருந்தால் பூ போட்ட டிசைன் திரை பொருத்தமாக இருக்கும். வெறும் கம்பியாக இருந்தால் பிளைன் திரை நன்றாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விருந்தினர்களை கவரும் வீட்டின் வரவேற்பு மேஜை அலங்காரம்
» விலகும் திரைகள்
» கவரும் கைகள் வேண்டுமா?
» கண்களைக் கவரும் உதடுகள்
» போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று 15.12.12க்குள் எழுதி அனுப்புவோம்;அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum