கொல்லாபுரியம்மன் கோவில்
Page 1 of 1
கொல்லாபுரியம்மன் கோவில்
தர்மபுரியில் இருந்து போச்சம்பள்ளி செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இருமத்தூரில் ஈஸ்வரன் கோவில் கட்டி வழிபட்ட ஸ்ரீகொல்லாபுரியம்மன் கோவில் உள்ளது. ஒருமுறை பிரம்மாவின் சிரசை ஈஸ்வரன் தன் கையில் கிள்ளும் போது, ஈஸ்வரனின் கையில் சிரசு ஒட்டிக் கொண்டது.
எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை. அப்படியே ஈஸ்வரன் இப்பகுதியில் வலம் வந்தபோது பசி எடுக்க ஆரம்பித்தது. அப்போது இருமத்தூர் அருகே ஒரு மூதாட்டியிடம் திருவோடு ஏந்தி உணவு கேட்டார். அந்தப் பெண் திருவோட்டில் சாப்பாடு போடாமல் தரையில் போட்டுள்ளார்.
அப்போது ஈஸ்வரன் கையில் இருந்த சிரசு கீழே விழுந்தது. பின்னர் அந்த உணவை ஈஸ்வரன் சாப்பிட்டார். சிரசு கீழே விழ காரணமாக இருந்த அந்தப் பெண்ணிற்கு கோவில் கட்டி ஈஸ்வரன் வணங்கி வந்தார். அந்த கோவில்தான் அங்குள்ள கொல்லாபுரியம்மன் கோவில் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிறப்புமிக்க கொல்லாபுரியம்மனை வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்கிறார்கள். மேலும், களவு போன பொருட்கள் திரும்ப கிடைக்கவும், பில்லி-சூனியத்தில் இருந்து விடுபடவும் இந்த கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் கோழிகளை காணிக்கையாக தொங்க விடும் வழக்கமும் உள்ளது.
போக்குவரத்து வசதி...
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» சுத்தரெத்தினேஸ்வரர் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum