தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமாதானக் கொடி பறக்கட்டும்! சண்டையே வராது!!

Go down

சமாதானக் கொடி பறக்கட்டும்! சண்டையே வராது!! Empty சமாதானக் கொடி பறக்கட்டும்! சண்டையே வராது!!

Post  ishwarya Tue Feb 12, 2013 1:54 pm

Angry Wife
இல்லறத்தில் தம்பதியரிடையே சண்டை, சச்சரவு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. சாதாரண தகராறு கூட பூதாகரமாக மாறி குடும்பத்தில் விரிசல் ஏற்பட வழிவகுக்கின்றன. கடைசியில் மனைவியின் கோபம்தான் குடும்ப பிரிவினைக்கு காரணம் தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. எனவே கோபக்கார மனைவியை சமாளிக்க சில வழிமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நிதானம் அவசியம்

குடும்பத்தில் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள். மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

டென்சனை தவிருங்கள்

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இருவருமே டென்ஷன் ஆக நேரிடும்.

நன்றி கூறுங்கள்

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். சமயத்தில் முத்தம் கூட ஒரு வித நன்றியின் வெளிப்பாடுதான். அதேபோல் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் அதற்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

புன்னகை முகம்

வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் போதே புன்னகை முகத்தோடு இருங்கள். உங்கள் மனைவி எதிர்பட்டால் புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் உங்கள் மீது எந்த கோபம் இருந்தாலும் பறந்தோடி விடும். சில நாட்கள் வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

உதவி செய்யுங்கள்

எந்த சந்தர்ப்பத்திலும் பிறர் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

பிடிவாதம் வேண்டாம்

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவிட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளியுங்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, சண்டையை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

வெள்ளைக் கொடி

சண்டை ஏற்பட்டால் சரிக்கு சரி மல்லுக்கட்டுவதை விட முடிந்தவரை சரண்டராக முயலுங்கள். கணவர் பறக்கவிடும் வெள்ளைக்கொடு குடும்ப வாழ்க்கையில் விரிசல்களை தவிர்க்க உதவும். சண்டையை வளர்க்காமல் அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

உங்க வீட்டுல நீங்க எப்படி? சமாளிப்பு திலகமா? சரண்டர் பார்ட்டியா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum