மனதிற்குப் பிடிக்காத மணவாழ்க்கையா? இனி எளிதில் விவாகரத்து பெறலாம்!
Page 1 of 1

Divorce
மனதிற்கு பிடிக்காமல் வாழும் தம்பதியர்கள் எளிதில் விவாகரத்து பெறும் வகையில் புதிய சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி இழுத்தடிக்காமல் எளிதில் விவாகரத்து பெறலாம்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் விவாதத்தின் போது இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்பு திருமண சட்டம் 1954 ஆகியவற்றில், சட்ட கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சட்டக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலின பேதம்,கொடூரமாக நடந்து கொள்வது, வேறு மதத்துக்கு மாறுவது, சராசரி மனிதராக செயல்படாததது, குணப்படுத்த முடியாத தொழுநோய், பால்வினை நோய் போன்றவை விவாகரத்து பெற புதிய காரணங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.தம்பதியர் இருவரும் ஒருமித்து விவாகரத்து பெறும் இந்து திருமணச் சட்டப் பிரிவு 13-பி,சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 28 ஆகியவற்றிலும் சிறு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாகரத்து கோரி தம்பதி இருவரும் ஒரு மனதாக மனு செய்யும் போது, அந்த மனு 6 மாதத்துக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றம் விரைவில் விசாரித்து விவாகரத்து வழங்கும்.அதிகபட்சம் 18 மாதங்களுக்குள் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும்.
இருவருமே விவாகரத்து கோரும்போது அவர்கள் விரைவில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளவும், கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
சொத்தில் பங்கு
விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவரின் சொத்தில் பாதி உரிமை உண்டு எனவும், இந்த சட்ட திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் பெற்ற குழந்தைகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் முதன் முறையாக இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்
» பெண் சகவாசம் பிடிக்காத தயாரிப்பாளர்
» ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!
» எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! – சொன்னவர் சூர்யா
» சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை சாக்லேட் பாய் ! சித்தார்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum