மாமனார், மாமியாருடன் வசிப்பதை விரும்பும் பெண்கள் அதிகரிப்பு
Page 1 of 1

Joint family
தனியாக வசிப்பதை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. திருமண இணையதளம் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றுக்கு பதிலளித்த பெண்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையே சிறந்தது என்று பதிலளித்துள்ளனர்.
சாதி டாட் காம் எனப்படும் திருமண இணையதளம் புதிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. சர்வேயில் பங்கேற்ற பெண்களிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். திருமணத்திற்குப் பின் கூட்டுக்குடும்பமாக வசிப்பீர்களா? தனிக்குடித்தனமாக இருக்கவே விரும்புவீர்களா? நகரங்களில் வசிப்பீர்களா? கிராமங்களில் வசிக்க விருப்பமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் 54 சதவிகித பெண்கள் மாமியார் மாமனார் போன்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல 21 சதவிகித பெண்கள் நியூக்ளியர் செட் அப் போல இருப்பதை விரும்புகின்றனராம். அதாவது தம்பதியர் ஜாலியாக தனியாக வசிப்பதே இந்த செட் அப்.
21 சதவிகித பெண்கள் கிராமங்களில் வசிப்பதை விட நகர்புறங்களில் வசிப்பதையே விரும்புகின்றனராம். மாமியார் மருமகள் சண்டை எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது என்று எண்ணற்ற இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். 20 பேர் வரை கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வசிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு காரணம் கூட்டுக்குடும்பம் என்றால் மிகப்பெரிய சப்போர்ட் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தன் கணவர் தன் குடும்பம் என்று சுயநலமிகளாக மாறிவரும் சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அணைப்பை விரும்பும் ஆண்கள்… உறவை விரும்பும் பெண்கள்!
» சாப்பாட்டை அதிகம் விரும்பும் பெண்கள்
» பாலுறவுக்குப் பிந்தைய செயலை விரும்பும் பெண்கள்
» அந்த நேரத்திலும் கூட செல்போனில் பேச விரும்பும் பெண்கள்!
» மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum