வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!!
Page 1 of 1

Couple
காதல் செய்ய துவங்கினாலே ஒரு சில சத்தியங்களை காதலர்கள் செய்து கொள்வர். அந்த காதலானது திருமணத்திற்கு முன்னும் சரி, திருமணத்திற்கு பின்னும் சரி. உண்மையாக காதல் செய்கிறார்கள் என்றால் நம்பிக்கைக்கு ஒருசில சத்தியங்களை வாங்கிக் கொள்வர். அந்த சத்தியங்களில் ஒரு சில சத்தியங்கள் உண்மையானது, ஒரு சில சத்தியங்கள் ஒரு சில சூழ்நிலைகளில் பொய்யானவையாக கூட ஆகலாம். அப்படி செய்யும் சத்தியங்களில் பொய்யானவை ஆக கூடியவை, எவை? என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர், என்று படித்துப் பாருங்கள்...
"நான் இனிமேல் உன்னைத் தவிர எந்த பெண்/ஆண் கூட பேசவே மாட்டேன்"...
இது தான் முதல் சத்தியமாக அனைத்து ஆண் மற்றும் பெண்ணிடமும் இருக்கும். ஆனால் இந்த சத்தியத்தை ஒரு சிலரே காப்பாற்ற முடியும். பெரும்பாலும் இதனை காப்பாற்றுவது என்பது கடினம். ஏனெனில் அனைத்து ஆண்களும், பெண்களும் வேலைக்காக, படிப்புக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்போது அவர்கள் அனைவரிடமும் பேச வேண்டிய நிலையும் இருக்கும். அப்படி பேசும் போது கண்டிப்பாக ஒரு நட்புறவு ஏற்படும், அதற்காக அதை காதல் என்று சொல்லக் கூடாது. அது ஒரு நட்பு. காதலுக்காக நண்பர்களை விட முடியுமா என்ன? ஆகவே அப்போது அந்த நிலையில் அந்த சத்தியம் பொய்யாகிவிடுகிறது.
"உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் கண்டிப்பாக நான் செய்வேன்"...
காதல் செய்த பிறகு நம் வாழ்க்கைத்துணைக்கு பிடித்தது, பிடிக்காதது என்று அனைத்தையும் அனுசரித்து செல்வோம் என்று நினைத்து தம்மை மாற்றிக் கொள்ள நினைப்போம். ஒரு சிலர் மாறலாம். ஆனால் உண்மையில் ஒருவர் மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வேண்டுமென்றால் உதாரணத்திற்கு உங்கள் காதலி எனக்கு பிட்சா பிடிக்கும் வா சாப்பிடலாம் என்று சொல்லலாம், அப்போது நீங்களும் சொல்லலாம், ஆமாம்! எனக்கும் பிடிக்கும் என்று. ஆனால் அதனை சொல்லத்தான் முடியுமே தவிர அதை வாங்கியப் பின் உங்களால் வாயில் வைக்கக் கூட முடியாது. என்ன சரிதானே? இந்த நிலையிலும் அந்த சத்தியத்தை மீறிவிடுகிறோம்.
"இனிமேல் ஞாயிற்றுக்கிழமை நீ சமைக்கக்கூடாது, நான் தான் சமைப்பேன்"....
எப்போதும் பெண்கள் தான் வீட்டில் சமைப்பார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களாகவே இதனை சொல்லி சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த சத்தியம் ஒரு சில நாட்களுக்கு கண்டிப்பாக நடக்கும். ஆனால் போக போக இந்த பழக்கம் மாறிவிடும். அப்போது அவர்கள் செய்த சத்தியம் காணாமல் போய்விடும்.
"உனக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த பார்ட்டி-க்கும் நான் போகமாட்டேன்"...
உங்கள் வாழ்க்கைத்துணைக்கு பார்ட்டிக்கு போவது பிடிக்கவில்லை என்றால், சந்தோஷமாக இனிமேல் போகமாட்டேன் என்று சொல்வீர்கள். ஆனால் அது நண்பர்களின் வேண்டுகோளாலும் மற்றும் ஏதோ ஒரு நிலையிலும் வாழ்க்கைத்துணையிடம் பொய் சொல்லி போக வேண்டி வரும். அப்போது அந்த சத்தியம் மறைந்துவிடும்.
"சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்"...
எப்பலாம் தம் வாழ்க்கைத்துணை ஏதாவது சொல்லி, தாம் அதை செய்யாமல் சண்டை வந்தாலும், அப்போது "சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்" என்று சொல்வீர்கள். ஆனால் சில வாரத்தில் அந்த சத்தியம் காற்றோடு போய்விடும். ஏனெனில் இயற்கையில் மனிதனின் குணங்களை எளிதில் மாற்றுவது என்பது கடினம். உதாரணமாக, எப்போதும் ஒரு இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்புறமாக இருப்பீர்கள். அந்த நேரத்தில் இந்த சத்தியத்தை பலமுறை செய்வீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் நடக்காமல் பொய்யாகிக் கொண்டே இருக்கும்.
என்ன நீங்களும் இந்த மாதிரி சத்தியங்கள் எல்லாம் செய்து இருக்கிறீர்களா!!!?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என்னது நிர்வாணமா நடிச்சேனா… பொய் பொய் முழு பொய்! – ஆன்ட்ரியா ஆவேசம்
» மது – த்ரிஷா சொன்ன பொய்?
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» மது - த்ரிஷா சொன்ன பொய்?
» ஆர்கஸம்... ஆண்களும் கூட பொய் சொல்கிறார்களாம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum