காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
Page 1 of 1
காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
Express Love
காதல் என்பது திருமணத்திற்கு முன் மட்டும் வருவதல்ல. அது திருமணத்திற்கு பின்னும் வரும். அப்படி காதல் செய்பவர்கள் அனைவரும் "ஐ லவ் யூ" என்ற வார்த்தையால் மட்டும் உண்மையான அன்பை புரிய வைக்க முடியாது, ஒரு சில செயல்கள் மூலமே அவர்கள் அன்பை முழுமையாக புரிய வைப்பதோடு, உணர வைக்கவும் முடியும்.
அப்படி என்னதான் உங்கள் கணவரிடம் ஆயிரம் முறை என்ன, மில்லியன் முறை "ஐ லவ் யூ" என்று சொல்லலாம். ஆனால் அப்படி சொல்லி தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை விட கண்களால், அன்போடு தொடுவதால், இதயத்தால் சொல்லி புரிய வைக்கலாம். மேலும் தாம் நடந்து கொள்வதின் மூலமும் தங்கள் அன்பை, தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். அத்தகைய அன்பை எப்படியெல்லாம் சொல்லலாம் என்று சில டிப்ஸ்-ஐ அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர், அது என்னவென்று கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...
1. கணவன் வேலைக்கு சென்ற பின், ஒரு நாளைக்கு இரு முறை போன் செய்து விசாரித்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதாக உணர்த்தலாம். மேலும் அப்படி போன் செய்து கோபமாக எப்போதும் பேசாமல் அன்போடு கொஞ்சி பேசுங்கள். அதற்காக அடிக்கடி போன் செய்து அவர்களை கோபப்படுத்தி விடாதீர்கள்.
2. கணவன் காலையில் குளித்து, சட்டை போடும் போது நீங்கள் சென்று அந்த பட்டனை போடலாம். பின் அவர்கள் சாப்பிட வரும் போது அவர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். மேலும் ஆபிஸ் செல்லும் போது அவர்கள் கேட்காமல், அவர்களது பையை எடுத்து கொடுத்து டாடா காண்பிக்கலாம்.
3. மேலும் அவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் டிபன் பாக்சில், உங்களுக்கு பிடித்த லிப் ஸ்டிக்கை போட்டு ஒரு பேப்பரில் முத்தம் கொடுத்து அவர்களுக்கு அனுப்பலாம்.
4. கிச்சனில் பழங்களால், அதுவும் அவர்களுக்கு பிடித்த பழங்களால் "ஐ லவ் யூ" என்று அடுக்கி வைத்துவிடுங்கள். பின் அவர்களை கூப்பிட்டு கிச்சனில் இருந்து ஏதேனும் எடுத்து வரச் சொல்லி அனுப்பி, அவர்கள் பார்க்குமாறு செய்து பாருங்கள், அப்போது அவர்கள் படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
5. கணவனை முதலில் பார்த்த அந்த நாளை நினைவில் வைத்து, அந்த நாளன்று அவர்களை முதலில் பார்த்த போது என்னென்ன சாப்பிட்டீர்களோ அதை சமைத்து அவர்களுக்கு அந்த நாளை நினைவுபடுத்தலாம். இல்லாவிட்டால் அந்நாளன்று இருவரும் சேர்ந்து எங்கு சென்றீர்களோ அந்த இடத்திற்கு அழைத்து சென்று நினைவு கூறலாம்.
6. டென்சனாக வரும் போது, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவை சமைத்து கொடுத்து, அன்போடு பேசி, வேடிக்கையான செயல்கள் ஏதேனும் செய்து அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பதன் மூலம் தெரியப்படுத்தலாம்.
இப்படிச் செய்து பாருங்களேன்...பிறகு
உன் விழி பார்த்தேன்
என் மொழி மறந்தேன்... என்று உங்கள் கணவர் கவிதை பாடினாலும் பாடுவார்...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நட்பு வேறு, தொழில் வேறு – அஜீத்தின் அல்டிமேட் முடிவு
» உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!
» மாற்றான் வேறு சாருலதா வேறு – செல்வது ப்ரியாமணி
» தட்சிணா மூர்த்தி வேறு, குரு வேறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum