புதுமணத் தம்பதியருக்கு எதற்கெல்லாம் சண்டைகள் வரும் தெரியுமா?
Page 1 of 1

Relation
சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர்கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் சண்டை போடும் காரணங்களே ஆகும். அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடுமையாக, பெரிய விஷயங்களாக இருக்கும். ஆனால் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வரும் சண்டைகளோ சிறு சிறு காரணங்களாகவே இருக்கும். அந்த சண்டைகளும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும். மேலும் அந்த திருமணமான தொடக்கத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முழுவதும் புரிந்து கொள்ளாததாலும் வரும் என்றும் அனுபவசாலிகள் கூறுகின்றனர். அதிலும் அவர்கள் சண்டை போடுவதற்கான அந்த சிறு காரணங்கள் என்னவென்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
திருமணம் ஆன முதலில் இருவரும் முதன் முறையாக ஒரே வீட்டில் இருப்பதால், இருவருக்கும் வீட்டில் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாது. உதாரணமாக, காலையில் லேட்டாக எழுந்திருப்பது, எழுந்ததும் பல் கூட துலக்காமல் பால் குடிப்பது, குளியலறையில் குளித்துவிட்டு அழுக்குத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சுத்தமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றாலே பெரும்பாலும் சண்டைகளானது வரும். மேலும் அதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும், அந்த பழக்கங்கள் மாறாமல் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டைகளானது வரும்.
திருமணம் ஆகி நீண்ட நாட்கள் பெற்றோருடன் இருந்து அவர்களை விட்டு பிரிந்திருப்பதால், அவர்களை காண வேண்டும் என்று மனைவி கணவரிடம் கேட்பாள். அவ்வாறு ஒன்று அல்லது இரண்டு முறை கேட்கலாம். ஆனால் அதையே அடிக்கடி கேட்டால் அதுவே பெரும் சண்டையாகிவிடும்.
மேலும் திருமணத்திற்கு முன் கணவன், அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக நேரம் கழித்து வந்தால் யாரும் எதும் சொல்லமாட்டார்கள். அப்போது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சந்தோஷத்தில் அலுவலகத்தில் இருக்கலாம். ஆனால் அதுவே திருமணம் ஆன பின்னர் அவ்வாறு லேட்டாக வந்தால் அவ்வளவு தான், வீட்டில் பெரும் பூகம்பமே வெடித்துவிடும். பிறகு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து ஏற்படும் களைப்பை விட, அவர்களை சமாதானப்படுத்த ஏற்படும் களைப்பே பெரும் களைப்பாகிவிடும்.
திருமணத்திற்கு பின், தம்பதியர்கள் தனியாக வீடு எடுத்து தங்கினால், தங்கள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் போது அந்த வேலையை சரியாக செய்யவில்லையென்றால், அதற்கும் சண்டைகளானது வரும். அந்த சண்டைகளை விட கூட்டுக்குடும்பத்தில் இருந்தால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. உதாரணமாக, மனைவி அவள் வீட்டில் நிறைய வேலைகளை செய்யாமல் இருந்து, கூட்டுக் குடும்பத்தில் வந்தவுடன் அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டி வந்தால், அப்போது என்ன வரும்? வேறு என்ன சண்டை தான்.
இருவரும் அவர்களது குணங்களை சரியாக புரிந்து கொள்ளாததால், கணவன் ஏதோ கிண்டலாக சொல்ல, அந்த வார்த்தை அல்லது கணவன் கூறிய விதம் பிடிக்காமல் போக, அந்த நேரத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப் போய் விபரீதம் ஆன கதையாக, அதுவும் ஒரு சண்டையிலேயே போய் முடியும்.
ஆகவே இத்தகைய சண்டைகள் அனைத்தும் ஒரு வகையில் அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நன்கு புரிவதற்காகவே ஏற்படுகிறது. இதன் மூலமும் அவர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, பிற்காலத்தில் அதனை தவிர்த்து, அவர்களை புரிந்து ஒரு நல்ல வாழ்க்கையை நடத்த உதவும் என்று கூறுகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதுமணத் தம்பதிகளே புரிந்து கொள்ளுங்கள்
» கிளிசரினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
» உப்பை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
» உங்களுக்கு தெரியுமா?
» கேடு வரும் முன்னே கேது திசை வரும் பின்னே ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum