லைப் போரடிக்குதா மறுபடியும் ஹனிமூன் போங்களேன்!
Page 1 of 1

Romance Tips
புதிதாய் திருமணம் முடித்த தம்பதியர் முதன்முதலாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனியாக எங்காவது ஹனிமூன் செல்வார்கள். ஆனால் திருமணம் முடிந்து பத்தாண்டுகள் கழித்து தம்பதியர் இருவரும் தனியாக இரண்டாவது ஹனிமூன் செல்வது அவர்களின் திருமண வாழ்க்கை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். குடும்பம், குழந்தைகள், பணிச்சூழல் என உழன்றதால் போராடித்துப் போனவர்கள் உடனே லீவ் போட்டுவிட்டு துணையுடன் செகண்ட் ஹனிமூன் கிளம்புங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்களேன்.
எங்கபோகப்போறீங்க?
முதன்முறையில் போன இடத்திற்கே மறுபடியும் போகாதீர்கள். அமைதியான உங்களின் பத்தாண்டுகால திருமண வாழ்க்கையை நினைத்து அசைபோடும் இடமாக போங்களேன். அதிகம் குளிரான இடங்களைத் தேடிப்போகவேண்டாம். இப்பொழுது போகப்போவது உங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், நடந்த தவறுகளையும் சரி செய்து கொள்வதற்காகத்தான். எனவே அதிகம் கூட்டமில்லாத இடமாக தேர்வு செய்யுங்கள்.
திட்டமிடுங்கள்
இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடுங்கள். போகும் இடம், தங்கப்போகும் இடம், எடுத்துச்செல்லப்போகும் லக்கேஜ் முதற்கொண்டு சரியாக திட்டமிடுங்கள். அப்பொழுதுதான் சரியாக இருக்கும். சீசன் பார்த்து சரியாக போங்கள். அப்பொழுதுதான் இடங்களையும் பார்த்து ரசிக்கமுடியும், நீங்களும், அனுபவிக்க முடியும். பீச் ரிசாட்ஸ், வனப்பகுதியா, மலைப்பாங்கான இடங்களா என்பதை முடிவு செய்யுங்கள். குறைந்த பட்சம் 4 நாட்களாவது இருந்தால்தான் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
முதன்முறையாக போனபோது இளமையின் துடிப்பில் நிறைய அட்வென்சர் வேலைகளில் இறங்கியிருப்பீர்கள். இப்போது அப்படி இல்லை. நடுத்தர வயதிற்கு உரிய சோர்வுகள் எட்டிப்பார்க்கும். பிரசவத்திற்கு பிந்தைய சிரமங்கள் இருக்கும். எனவே அதிகம் சிரமம் இல்லாத பகுதியாக சென்று அணு அணுவாய் ரசியுங்கள்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு
சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அழைத்துக்கொண்டு போய் வாருங்கள். அதே சமயம் உங்களை விட்டு அவர்கள் இருந்து கொள்வார்கள் எனில் தாத்தா, பாட்டியிடமோ, நெருங்கிய உறவினர்களிடமோ விட்டுவிட்டு தம்பதி சமேதராக ஜாலியாக கிளம்புங்கள்.
அன்பு பரிசு
இது காதலை உணர்த்த, காதலை உணரும் பயணம். இதுபோன்ற பயணம் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்து இப்பொழுதுதான் கூடி வந்திருக்கிறது. எனவே உங்களின் துணை மீதான காதலை உணர்த்தும் வகையில் அழகாய் ஒரு பரிசு வாங்கி வையுங்கள். கடற்கரையில் கைகளை கோர்த்து வாங்கிங் செல்லும் போதோ, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்தும் போதோ அல்லது படுக்கை அறையிலோ, தனியான சந்தர்ப்பத்தில் சர்ப்ரைசாக அந்த பரிசினை கொடுங்கள். உங்கள் துணையின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை அப்பொழுது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
அதிக எதிர்ப்பார்ப்பு வேண்டாம்
பயணம் பற்றிய திட்டமிடுதலில் சில சொதப்பல்கள் இருக்கத்தான் செய்யும். இயற்கையின் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டும். அந்த நேரத்தில் அதற்கேற்ப நடந்துகொண்டால் சூழ்நிலையை அழகாய் சமாளிக்கலாம். இரண்டாவது ஹனிமூன் கிளம்பும் தம்பதியரே மறக்காமல் போகும் இடத்தின் ரூட் மேப்பினை கண்டிப்பாக கைப் பையில் வைத்திருங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லைப் இஸ் பியூட்டிஃபுல்
» உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...!
» 4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்
» ஜோடியா ஒரு ஜாலி ஒரு பயணம் போங்களேன்!
» ஜிம்முக்கு வெளிக்கிட்டீங்களா?? 1 நிமிஷம் இத படிச்சிட்டு போங்களேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum