காதலை முறிவடையச் செய்யும் காரணங்கள்!!!
Page 1 of 1
காதலை முறிவடையச் செய்யும் காரணங்கள்!!!
Bad Reasons To Break Up
எப்படி உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், நோய்கள் வந்துவிடுகின்றனவோ, அதேப் போல் காதலில் சுவாரஸ்யம் இல்லாவிட்டால், அந்த காதலுக்கு விரைவிலேயே பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பு இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் முறிவை ஏற்படுத்தும். இதில் சுவாரஸ்யம் என்று சொல்வது, எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல், அவ்வப்போது, துணையுடன் எங்காவது செல்வது, ஏதாவது வித்தியாசமாக வாங்கிக் கொடுப்பது, நம்ப முடியாத வகையில் அதிர்ச்சியை கொடுப்பது என்று இருந்தால், நிச்சயம் காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்கும். ஆனால் எதுமில்லாமல், எந்த நேரமும் ஒரே அமாதிரி சென்றால், அது போர் அடித்துவிட்டு, பின் அந்த போரானது மற்றவர்களின் மீது மனதை அலை பாயச் செய்யும். பின்னர் காதலித்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரிய நேரிடும்.
பொதுவாக காதலில் பிரிவு இருக்கிறதென்றால், அது இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் தான் ஏற்படும். ஆனால் சிலருக்கோ எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்திற்காக பிரிந்துவிடுகின்றனர். இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் இவ்வாறு தான் பிரிகின்றனர். அது என்ன காரணங்கள் என்று தெரிய வேண்டுமா? அப்படியெனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
* காதலிப்பவர்களுடன் வெளியே செல்லும் போது, அழகாக இருப்பவர்களை பார்ப்பது சாதாரணமான ஒரு விஷயம். இந்த உலகில் அழகை ரசிப்பது பெரிய தவறு இல்லை. ஆனால் காதல் செய்துவிட்டு, அழகை ரசித்தால், தவறாகிவிடும் போல் இருக்கிறது. ஏனென்றால், துணையுடன் வெளியே சென்று விட்டு, அப்போது யாராவது ஒருவர் அழகாக செல்லும் போது, அவர்களை பார்த்ததை, துணை பார்த்துவிட்டால், அந்த காரணத்தைக் கொண்டே சிலர் பிரிந்துவிடுகின்றனர். இது தான் பெரும்பாலானோருக்கு இருக்கும் காதல் பிரிவிற்கான காரணங்களுள் முதன்மையானவை.
* சிலர் எப்போது பார்த்தாலும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் அவ்வாறு குறை கூறுவது எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் தினமும் எந்த ஒரு செயலை செய்தாலும், குறை கூறினால், அதனால் ஆத்திரமடைந்து, பிரிவு ஏற்படுகிறது.
* பெரும்பாலான காதல் பிரிவிற்கு திருமணம் என்ற ஒரு வார்த்தையும் காரணம். ஏனெனில் இருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில் இருப்பார்கள். அதை ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமல், பிரிந்து விடுகின்றனர். காதல் செய்தால், திருமணம் நிச்சயம் நடக்கும் தான். ஆனால் அதைப் பற்றி அடிக்கடி பேசினால், நம்பிக்கை இல்லையோ என்று சந்தேகம் குடிப்புகுந்து, பின் காதல் வாழ்க்கைக்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும்.
* இன்றைய காலத்தில் காதல் செய்பவர்கள் முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சாதாரணமான ஒன்று. இத்தகைய செயல்கள் பொதுவாக காதல் அதிகமானால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் நடைபெறும். ஆனால் இந்த செயல்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பர், சிலரோ மனநிலையைப் பொறுத்து ஈடுபடுவர். இந்த நிலையில் இருவருக்குள் சிறு சண்டை வந்துவிட்டு, அதனை சமாதானப்படுத்த அருகில் செல்லும் போது கோபமாக இருப்பதால், தள்ளி விடுவர். இவ்வாறு தள்ளி விடுவதால், கூட சிலரது காதல் பிரிவில் முடிந்துள்ளது.
* அனைவரும் எதிர் எதிர் முனைகள் தான் ஈர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வாறு எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் பிரிவுகள் ஏற்படும். எப்படியெனில் இருவருக்கும் ஒரு சில விஷயங்கள் தான் ஒத்து போகும். பல விஷயங்கள் எதிராக இருக்கும். இப்படி இருக்கையில் ஒரு காலக்கட்டத்தில் சகிப்புத்தன்மை குறைந்து, இருவருக்கும் உள்ள காதலானது மறைந்து, பிரிவை ஏற்படுத்தும். இந்த நிலையில் பிரிவு ஏற்பட்டால், பிரிவிற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
என்ன நண்பர்களே! மேலே குறிப்பிட்டுள்ளவை சரிதானா? வேறு ஏதாவது இருந்தால், அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
» காதலை வரவேற்கும் நீல நிறம் ...!
» உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள் காதலை!
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» காதலை வேறு எப்படி வெளிப்படுத்தலாம்???
» காதலை வரவேற்கும் நீல நிறம் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum