நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?
Page 1 of 1
நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?
நவராத்திரி பூஜை மற்றும் கொலு வைப்பதை 15-ந்தேதி மாலை தொடங்குவதா அல்லது 16-ந் தேதி தொடங்குவதா என்பதில் இந்த ஆண்டு சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மகாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி பூஜை தொடங்க வேண்டும் என்பது மரபாக உள்ளது. அப்படி பார்த்தால் 16-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி தசமி திதி வரை 9 நாட்களே வருகிறது.
ஆனால் தசமி திதியன்று நடைபெறும் தசரா திருவிழா சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாளான 10-வது நாள்தான் நடைபெற வேண்டும். எனவே நவராத்திரி பூஜையை 15-ந்தேதி மாலை தொடங்கலாம் என்று சொல்கிறார்கள். ஏனெனில் 15-ந்தேதி மகாளய அமாவாசை மாலை 6.27 மணி வரையே உள்ளது.
அதன்பிறகு பிரதமை திதி தொடங்கி விடுகிறது. ஆகையால் 15-ந்தேதி மாலை 6.27 மணிக்கு பிறகு நவராத்திரியின் முதல்நாள் பூஜையைத் தொடங்கி விடலாம். மறுநாள் 16-ந்தேதி பிற்பகலில் பிரதமை திதி முடிந்து தூவாதியைத் திதி தொடங்கிவிடுகிறது. எனவே அன்று நவராத்திரி 2-வது நாள் பூஜைகளை நடத்தலாம்.
திருப்பதி கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் இப்படி 15-ந்தேதி தொடங்கி நடத்தும் வகையில்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே நாமும் 15-ந்தேதி மாலை பிரதமை திதி தொடங்கியதும், நவராத்திரி பூஜைகளை தொடங்குவதில் தவறு இல்லை.
என்றாலும் சிலர் மகாளய அமாவாசை தினத்தன்று எப்படி நவராத்திரி பூஜையை தொடங்குவது என்று தயங்குகிறார்கள். இத்தகைய தயக்கத்துடன் இருப்பவர்களுக்காக, மற்றொரு மாற்று வழி கூறப்பட்டுள்ளது. அதன்படி 16-ந்தேதி நவராத்திரி பூஜையை தொடங்கலாம். 16-ந்தேதி காலை பிரதமை திதியில் முதல் நாளுக்குரிய பூஜையை நடத்தலாம்.
மாலை நேரத்தில் 2-வது நாளுக்குரிய அலங்காரம் செய்து பூஜை செய்யலாம். இப்படி செய்வதால் 16-ந்தேதி முதல் நாளே 2 நாட்களுக்குரிய பூஜைகள் நடந்து முடிந்து விடும். மறுநாள் 17-ந்தேதி 3-வது நாள் பூஜையாக தொடரும். எனவே 24-ந்தேதி 10-வது நாள் விஜயதசமி தசரா விழா கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும்.
இந்த விஷயத்தில் குழப்பமே தேவை இல்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப நவராத்திரி பூஜையை தொடங்கலாம். 15-ந்தேதி மாலை தொடங்க நினைப்பவர்கள், அன்றே அம்மனுக்கு அலங்காரம் செய்து, அம்மனை அழைத்து பூஜை நடத்தலாம்.
அன்றே நல்ல நேரம் பார்த்து கொலு வைத்து விடலாம். 15-ந்தேதி பூஜையை தொடங்க முடியாதவர்கள் 16-ந்தேதி தொடங்கலாம். அன்று 2 தடவை பூஜிக்க வேண்டும் அவ்வளவுதான். உங்கள் வசதிக்கு ஏற்ப பூஜை தொடக்கத்தை தீர்மானித்து கொள்ளுங்கள்

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?
» நவராத்திரி பூஜையை எப்போது தொடங்குவது?
» இரண்டு மாதங்கள் ஓய்வு… ரஜினி ராணாவை மீண்டும் தொடங்குவது எப்போது?
» கல்வியை தொடங்குவது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum