கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?
Page 1 of 1

Pregnancy
ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை அடைவது என்பது ஒரு வரப்பிரசாதம். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். அந்த பாதிப்புகள் தாயின் உடலில் ஏற்பட்டாலும் சரி, மனதில் ஏற்பட்டாலும் சரி. அவ்வாறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் போது, அந்த பாதிப்புகள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது 3 மாதங்கள்/வருடங்கள் ஆன பின்பு கூட ஏற்படும். ஆகவே கருவுற்ற பெண்கள் குழந்தை நன்கு வளர சில நடைமுறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி, அவற்றை பட்டியலிட்டுள்ளனர்.
1. முதலில் கருவுற்ற பெண்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. அதிலும் தலைக்குக் குளித்தால், நீண்ட நேரம் ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உண்ணும் உணவில் அதிக காரம் அல்லது புளிப்பு உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அதிலும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். உண்ட உடனே தூங்கக் கூடாது, வேண்டுமென்றால் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
3. மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்க்க வேண்டும். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து, மற்ற பழங்களை சாப்பிடலாம்.
4. தண்ணீரை நன்கு காய்ச்சியே குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரானது குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
5. இடி, மழை, மின்னல் போன்றவை ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது. அதே போல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது.
6. கர்ப்பக்காலத்தில் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுவதால் சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பர். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
7. அதிக சப்தம் போட்டு பேசுதல், மனதை பாதிக்கும் காட்சிகளை பார்த்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் குழந்தையானது எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மிதமான வேலை, மிதமான உடற்பயிற்சி, மிதமான நடை, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படி என்றும் கூறுகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா!!!
» கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?
» பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!
» ஏன் வருது இந்த வெள்ளை முடி... காரணம் தெரியணுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum