தாய்மையடைவதை தடுக்கும் காபி!!
Page 1 of 1
தாய்மையடைவதை தடுக்கும் காபி!!
Coffee
குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தாய்மார்கள், காபி, கொழுப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் தினசரி நான்கு கப் காபி குடிப்பது கரு உருவாவதை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மாறிவரும் உணவுப்பழக்கம், சூழ்நிலை, மரபியல்ரீதியான பிரச்சினைகளினால் இன்றைய இளையதலைமுறையினரிடையே மலட்டுத்தன்மை அதிகரித்துவருகிறது. இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் காபி, கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முளைகட்டின பயிறு வகைகள், காய்கறிகள் சாப்பிடலாம். கீரைகள் அதிக அளவில் உட்கொள்ளவேண்டும். மீன் உணவுகளை சாப்பிடலாம். சிக்கன் சாப்பிடக்கூடாது. கார்பனேட் பானங்களான பெப்ஸி, கோக் போன்றவைகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அதிகம் டென்சன் ஆனாலும் அது கருவினை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
அதேபோல் சாதாரணமாகவே தினசரி நான்கு கப் காபி குடிக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் என்னும் பொருள்தான் என்று கூறியுள்ளனர்.
காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
காஃப்பைன் பெண்களின் கரு முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கருவுறுதலில் மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் காபி குடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.
தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதிமுக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது. தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.
காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது. குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் கேன்சரை தடுக்கும் காபி
» சுக்கு காபி
» காபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா?
» காபி ஐஸ் கிரீம்
» சமையல்:ராகி காபி
» சுக்கு காபி
» காபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா?
» காபி ஐஸ் கிரீம்
» சமையல்:ராகி காபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum