கர்ப்பமா இருக்கும் போது எடையை கொஞ்சம் கவனிங்க!!!
Page 1 of 1

Pregnancy Weight Gain
பெண்கள் திருமணத்தின் போதோ, கர்ப்பமாக இருக்கும் போதோ எவ்வளவு தான் ஒல்லியாக இருந்தாலும், பிரசவத்திற்குப் பின் அவர்கள் அதேப் போல் இருப்பதில்லை. சற்று எடை கூடி விடுகின்றனர். உதாரணமாக, உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனை பார்த்தாலே தெரியும். அவர் உலக அழகியாக இருந்த போதும் சரி, அதன் பின்னரும் சரி, மிகவும் நலினமான கட்டுடலைப் பெற்று, தன் உடலை பிட்டாக வைத்திருந்தார். அவரது அழகின் இரசியம் என்னவென்று அறிய பலரும் ஆவலாக இருந்தனர். ஆனால் தற்போது பிரசவத்திற்குப் பிறகு பார்த்தால், அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரது அழகான வடிவமும் மறைந்தது.
இதற்கு ஒரே பதில் என்னவென்று கேட்டால், கர்ப்பமாக இருக்கும் போது, அடிக்கடி உடல் எடையை பார்க்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் குண்டாவதைத் தடுக்கலாம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது கண்டதை சாப்பிட்டு, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறோம். இப்போது கர்ப்பமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை மருத்துவர்கள் கூறுவதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நிறைய பசி எடுப்பது போல் தோன்றும். கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அதிலும் சில நல்ல உணவுகளான சாக்லேட், வறுத்த மற்றும் காரமான உணவுகள். ஆனால் இவை அனைத்தும் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இவை ஆரோக்கியம் தான், சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள். ஆகவே அவற்றை சாப்பிட்டு மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை சற்று குறைவாக வைத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
கர்ப்பமாகும் அனைவருக்கும், கர்ப்பத்தின் போது எவ்வளவு எடையுடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிறிது தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் நிறைய பேருக்கு எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பதை தெரியாமல், நன்கு சாப்பிட்டால் தான் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று நன்கு சாப்பிட்டு, பிரசவத்திற்குப் பின்னர் வருத்தப்படுகின்றனர். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, சாதாரண எடையை விட 12-14 கிலோ அதிகமாக இருக்கும்.
சிலசமயங்களில் 12 கிலோ கூட எடை இல்லாமல் இருக்கும். ஏனெனில் அது குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்தது. குழந்தை வளர வளர தான் எடை அதிகரிக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்களில் 3 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். அதன் பிறகு வாரத்திற்கு 1/2 கிலோ முதல் 1 கிலோ வரை அதிகரிக்கும். ஆனால் இது சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஆனால் இது மாதிரி எடை கூடினால் நல்லது. ஆகவே அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்தால், அனைத்து வீட்டு வேலைகளுக்கும் விடுமுறை போல் தான் என்று நினைத்து, எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர். இதுவே அவர்களின் எடை கூடுதலுக்கு பெரும் காரணமாக அமைகின்றன. கர்ப்பமாவது வீட்டு வேலையை நிறுத்துவதற்காக அல்ல. அவ்வாறு நிறுத்தினால் பின்னர் அது சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திவிடும். இல்லையென்றால் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வழி செய்துவிடும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க, கர்ப்பத்தின் போது சற்று உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், எப்போதுமே ஒரு நல்ல தோற்றத்தில் இருக்க முடியும். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டு வேலையை செய்வதை நிறுத்திவிட வேண்டாம். அதற்காக மிகவும் கடுமையான வேலையையும் செய்ய கூடாது.
இவ்வாறெல்லாம் இருந்தால், உடல் ஆரோக்கியமாக, நன்கு பிட்டாக இருப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பமா இருக்கும் போது நெஞ்சு எரிச்சலா இருக்கா? இத படிங்க...
» கர்ப்பமா இருக்கும் போது ஞாபக மறதி அதிகம் இருக்குதா?
» உடல் எடையை குறைக்க வீடு இருக்கும் போது, ஜிம்முக்கு எதுக்கு போகணும்?
» முதுகையும் கொஞ்சம் கவனிங்க!
» கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum