கர்ப்பமா இருக்கும் போது ஞாபக மறதி அதிகம் இருக்குதா?
Page 1 of 1

Pregnancy Brain
கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் ஞாபக மறதி. அதிலும் இந்த மறதி முதல் மூன்று மாதங்களிலும், கடைசி மூன்று மாதங்களிலும் தான் ஏற்படும். அதற்காக எதற்கும் கவலைப்பட வேண்டாம். இது சாதாரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான். மேலும் அந்த நேரத்தில் அவர்களது மூளை என்னவெல்லாம் நினைக்கும் என்பதைப் பார்க்கலாமா!!!
கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பெண்களின் மூளைச் செல்களை பாதிக்கும். இதனால் தான் அவர்களுக்கு மறதி ஏற்படும். இதற்காக பயப்பட வேண்டாம். குழந்தை பிறந்த பின்பு இந்த பிரச்சனை சரியாகிவிடும். ஒரு சிலருக்கு மட்டும் தான், குழந்தை பிறந்த பின்பு, சில மாதங்களுக்கு பிறகு சரியாகும்.
மேலும் கர்ப்பத்தின் போது, எப்போதுமே பெண்கள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பாள். இதன் காரணமாகவும் பெண்கள் மறந்துவிடுகின்றனர்.
அதிலும் இந்த நேரத்தில் நிறைய மனஅழுத்தம் இருக்கும். அவ்வாறு இருக்கும் போது பெண்ணானவள் அவள் உண்ணும் உணவு, மருந்துகள் போன்றவற்றை சாப்பிட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் அவர்களுக்கு மிகுந்த டென்சனை ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறக்கும் வரை அந்த அழுத்தம் இருக்கும். இதனால் தான் சிலருக்கு மறதி ஏற்படுகிறது.
கர்ப்பத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளில் பொதுவாக அனைவருக்குமே வருவது, தூக்கமின்மை. இந்த நேரத்தில் அவர்களால், உடலுக்கு தேவையான அளவு தூக்கத்தை பெற முடியாமல் இருப்பர். இந்த தூக்கமின்மையாலும் அவர்கள் மறந்து விடுகின்றனர்.
கருவில் குழந்தை இருக்கும் போது அதிகமாக மறதி ஏற்படுகின்றது என்பதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ? என்று பயப்பட வேண்டாம். இது சகஜமான ஒரு பிரச்சனை தான். இவை அனைத்துமே, பிரசவத்திற்குப் பின் போய்விடும்.
கர்ப்பத்தின் போது மறதியை சரிசெய்ய...
கர்ப்பத்தினால் ஏற்படும் மறதியைத் தடுக்க நிறைய வழிகள் இருக்கிறது. உதாரணமாக, மறதியைத் தவிர்க்க, செய்ய வேண்டியதை எழுதி வைத்துக் கொள்ளலாம். இதனால் மறந்திருப்பதை ஞாபகப்படுத்திவிடலாம்.
வேண்டுமென்றால் மொபைலில் அல்லது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருக்கும் ரிமைன்டரில் அலாரம் வைத்துவிட்டால், மறந்தது நினைவிற்கு வரும்.
பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் போது, வேலையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலையை வீட்டில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் எதையும் மறந்துவிட முடியாது. ஏனெனில் வேலை அதிகமாக இருந்தால் தானே, அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.
முக்கியமான ஒன்று போதுமான அளவு நன்கு தூங்கி எழுந்திருக்க வேண்டும். அதிலும் குறைந்தது 8-9 மணிநேரத் தூக்கமாவது வேண்டும். இதனால் அதிக மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது செய்து வாருங்கள். எதையும் மறக்காமல் இருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பமா இருக்கும் போது எடையை கொஞ்சம் கவனிங்க!!!
» கர்ப்பமா இருக்கும் போது நெஞ்சு எரிச்சலா இருக்கா? இத படிங்க...
» ஞாபக மறதி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum