தேர்ந்தெடுத்து சாப்பிடும் குழந்தைகளைச் சமாளிக்க பரிந்துரை
Page 1 of 1
தேர்ந்தெடுத்து சாப்பிடும் குழந்தைகளைச் சமாளிக்க பரிந்துரை
தேர்ந்தெடுத்து சாப்பிடும் குழந்தைகளைச் சமாளிக்கவும், ஆரோக்கிய உணவுகளை ஊக்குவிக்கவும் பெற்றோருக்கு உதவும் வகையில் அபாட் நியூட்ரிஷன், குழந்தைகள் நல நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நிறுவியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவை குறித்த பரிந்துரைகளையும் வழங்க முடியும் என்று அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் பென்னி கெர்ஸ்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் குழந்தைகள் நல பேராசிரியராகவும் உள்ள கெர்ஸ்னர் மேலும் கூறுகையில், பள்ளிக்குச் செல்லக்கூடிய அல்லது அதற்கு முந்தைய 2-3 வயதிலான குழந்தைகளை அந்தக் குழந்தைகளின் தாய் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலையைப் போக்க, குழந்தைகள் விரும்பும் உணவு வகைகளை அவர்களின் போக்கிற்கேற்ப ஊட்டச்சத்து நிறைந்த உணவாக அவர்களாகவே சாப்பிடும் நிலையை ஏற்படுத்துதல் அவசியம் என்றார்.
குழந்தைகளுக்கு பசி இல்லாத போது உணவை சாப்பிட மறுப்பதாகவும், தேவையான நேரத்தில் அவர்களாகவே கையால் எடுத்துச் சாப்பிடுவதை பழக்கப்படுத்த வேண்டும் என்றார் கெர்ஸ்னர்.
குழந்தைகளைச் சாப்பிடச் செய்வதற்காக அவர்களை மிரட்டவோ அல்லது அவர்களுக்கு பிடித்ததை வழங்கவோ செய்யும் போது பிரச்சினை மேலும் சிக்கலாவதாகவும் அவர் கூறினார்.
உலகம் முழுவதும் அபாட் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வின்படி, 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன் வருங்காலத்தில் படிப்பில் ஆர்வமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழலாம் என்றார் கெர்ஸ்னர்.
பேட்டியின்போது உடனிருந்த சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். வசந்த குமார், இதுபோன்ற தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு நுண்ணியல் ஊட்டச்சத்து - பேரியல் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதுபோன்ற குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள், மன வளர்ச்சி குன்றுதல், சமூக மற்றும் உணர்வுப்பூர்வ சிக்கல்களும் ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான தாய்மார்கள், இன்றைய பணிச்சுமை, வேலைக்குச் செல்லும் சூழ்நிலையால் தங்களின் குழந்தைகள் பால் அருந்தினால் போதும். அதிலேயே உடலுக்குத் தேவையான சக்தி குழந்தைகளுக்கு கிடைத்து விடுவதாக தவறான கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறிய டாக்டர் வசந்த குமார், பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் இருப்பதில்லை என்றார்.
தன்னிடம் குழந்தைகளை அழைத்து வரும் பெரும்பாலான தாய்மார்கள் சாப்பிட மாட்டேன்கிறது என்ற புகாருடனேயே வருவதாகவும், அப்படி வரும் தாய்மார்களுக்கு விரிவான கவுன்சலிங் மூலம் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது என்பதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளை சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. நொறுக்குத் தீனிகளை கொரிப்பதற்குக் கொடுப்பதைக் குறைத்தால் பசி அதிகரித்து குழந்தைகள் சரிவர சாப்பிட நேரிடும். வயதுக்கு ஏற்ற உணவுகளை அளித்தல் அவசியம்.
குழந்தைகள் சாப்பிடும் போது உணவுப் பொருட்களை சிந்தினால் தடுக்க வேண்டாம். பன்முக அணுகுமுறை மூலம் குழந்தைகளை ஒழுங்காக சாப்பிட வைப்பதுடன் அவர்களின் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம் என்றார் வசந்தகுமார்.
ஊட்டச்சத்துடன் கூடிய உணவை குழந்தைகளுக்கு அவர்கள் விரும்புவகையில், சாப்பிடச் செய்வது குறித்து தாய்மார்களுக்கு பயிற்சியளிக்கக்கூடிய திட்டம் குறைந்தபட்சம் மாநில அளவிலாவது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். ஒரு சில மருத்துவமனைகளில் தாய்மார்களுக்கு கவுன்சலிங் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேட்டியின் போது டாக்டர் வினிதா சத்யவிரத் உடனிருந்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேர்ந்தெடுத்து சாப்பிடும் குழந்தைகளைச் சமாளிக்க பரிந்துரை
» சாப்பிடும் விதம் சரிதானா?
» சாப்பிடும் முன் சூப்
» கேரட்டை சாப்பிடும் முறை...
» குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்!!!
» சாப்பிடும் விதம் சரிதானா?
» சாப்பிடும் முன் சூப்
» கேரட்டை சாப்பிடும் முறை...
» குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum