குட்டீஸ் புஷ்டியா வளர மசித்த உணவு குடுங்க
Page 1 of 1

Eating Tips
புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே உணவு. தாய்பாலை தடங்கல் இல்லாமல் கொடுத்தாலே சிசுவானது பூரண நலத்துடன் மகிழ்ச்சியுடன் உலகை எதிர்கொள்ளும். 6 மாதம் கழித்து தாய்பாலுடன் இணை உணவும் தரவேண்டும். குழந்தைக்குத் தரக்கூடிய உணவு உடம்பிற்கு ஒத்துக்கொள்ளக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
திட உணவு அவசியம்
ஆறாம் மாதம் தொடக்கத்தில் நன்கு குழைந்த சாதத்தை ஒரு கரண்டி எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு மசித்து வடிகஞ்சி போல தயாரித்து அதனை ஒரு ஸ்பூன் கொடுக்கலாம். இது ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் இதனை இருவேளையாக அதிகரித்து கொடுக்கலாம்.
கேழ்வரகு கூழ்
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகினை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும்.
இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
முட்டை தயிர்
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
மசித்த பழங்கள்
வாழைப்பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம். பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்
வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பசும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.. அதேசமயம் பாக்கெட் பால் கொடுக்கும் போது தண்ணீர் கலந்து கொடுக்கவேண்டும். ஏனெனில் அது திடத்தன்மை அதிகமாக இருக்கும் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!
» குட்டீஸ் பால் பற்களை பத்திரமா பாத்துக்கங்க !
» குட்டீஸ் கொண்டாட்டம்!
» உங்க குட்டீஸ் எப்ப பார்த்தாலும் டிவி பார்க்கிறாங்களா?
» குட்டீஸ் மனசு நோகாமல் ‘நோ’ சொல்லுங்க !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum