தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

200 சிலைகள் மத்தியில் இருக்கும் கோவில்

Go down

200 சிலைகள் மத்தியில் இருக்கும் கோவில் Empty 200 சிலைகள் மத்தியில் இருக்கும் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 2:12 pm

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாயில் வெலிங்டன் ஏரியை ஒட்டி சப்தகன்னிகள் கோவில் அமைந்துள்ளது. 40 அடி அகலத்தில் உள்ள பிரமாண்ட பீடத்தில் 7 கன்னிகள் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வேண்டுதலை நிறைவேற்றினால் இங்கு சிலைகளை அமைத்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது.

எனவே வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோவிலை சுற்றி 200-க்கும் மேற்பட்ட சிலைகளை அமைத்துள்ளனர். குழந்தைவரம், திருமணம் வரம் வேண்டினால் உடனே நிறைவேறும் என்று நம்புகின்றனர்.எனவே இதற்காகவே ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இடைச்செருவாய் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாகவும் வழிபடுகிறார்கள்.

5 ஆண்டுக்கு ஒரு தடவை பெரிய அளவில் கோவிலில் விழா நடத்துகிறார்கள். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். கோவிலில் தினமும் பூஜை வழிபபாடுகள் நடக்கினறன. அப்போது 7 சிலைகளுக்கு மட்டும் அல்லாமல் 200 சிலைகளுக்கும் பூஜை செய்கிறார்கள். இந்த கோவில் திட்டக்குடியில் இருந்து ராமநத்தம் செல்லும் வழியில் 3- வது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum