குழந்தைங்க கடிக்குறாங்களா? உடனே அதை நிறுத்துங்க...
Page 1 of 1
குழந்தைங்க கடிக்குறாங்களா? உடனே அதை நிறுத்துங்க...
குழந்தைகள் வளரும் போது நிறைய கெட்டப் பழக்கங்களை பழகுவார்கள். ஆனால் அவற்றை எங்கும் பழகுவதில்லை. அனைத்தும் அவர்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து தான் பழகுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு கெட்டப் பழக்கம் தான் கடிப்பது. குழந்தைகளின் கண்களுக்கு ஏதேனும் தென்பட்டால் போதும், அவர்கள் அதை உடனே வாயில் தான் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் கடிக்கும் போது, அதை கண்டிக்காமல் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. ஏனெனில் அவ்வாறு விட்டால், பின் அவற்றை அவர்களிடம் இருந்து விட வைப்பது என்பது கடினமாகிவிடும். ஆகவே அவற்றை எப்படியெல்லாம் நிறுத்த வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
How To Stop Your Child From Biting?
* நிறைய குழந்தைகள் கடிக்க ஆரம்பிப்பதற்கு முதல் காரணம், அவர்களுக்கு பற்கள் முளைப்பதனால் தான். ஆகவே அப்போது அவர்களுக்கு ஏதேனும் ஈரமான துணி அல்லது நிப்புலை கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் அவர்கள் பார்ப்பதையெல்லாம் கடிப்பதைப் போல் வருகிறார்களோ, அப்போதெல்லாம் இவற்றை கொடுத்தால், அவர்களது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பின் பற்கள் முளைத்துவிட்டால், அவற்றை மறந்துவிடுவார்கள்.
* குழந்தைகள் இருக்கும் போது எப்போதுமே பெற்றோர்கள் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவையில்லாமல் எதையாவது கடிப்பது போல் இருந்தால், அப்போது அவர்களிடம் இப்படி செய்யக் கூடாது என்று உடனே சொல்ல வேண்டும். அதைவிட்டு, பொறுமையாக சொல்லலாம் என்று விட்டுவிட்டால், பின் அவர்கள் மனதில் பெற்றோர் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்று தோன்றிவிடும். சிறுவயதிலேயே அது தவறு என்று சொன்னால், குழந்தைகள் மனதில் அது நன்கு பதிந்துவிடும்.
* குழந்தைகளிடம் எப்போதுமே அதட்டி பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் எப்போதும் குழந்தைகளிடம் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமாகவும், கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபமும் பட வேண்டும். அப்படியிருந்தால் தான் அவர்கள் எதை சொன்னாலும் புரிந்து கொள்வார்கள்.
* குழந்தைகள் ஏதேனும் கோபம் வந்தால், அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அல்லது பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக கடிப்பார்கள். ஆகவே அவர்களுக்கு கோபம் வரும் வகையில் எதையும் செய்ய வேண்டாம். ஏனெனில் குழந்தைகள் தேவையில்லாமல் கடிக்க மாட்டார்கள். அவர்களை எரிச்சல் ஏற்படுத்தினால் தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். ஆகவே அவ்வாறு நடப்பதை பெற்றோர்கள் தான் நிறுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு கோபம் வந்தால், அவற்றை வெளிப்படுத்த வேறு முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் எதையும் அவர்கள் புரியும் வகையில் செய்தால், அவர்கள் அவ்வாறு செய்வதை நிறுத்திவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், கடிப்பதால் என்ன நடக்கும் என்றும் தெளிவாக சொல்ல வேண்டும்.
எனவே, மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு குழந்தைகளிடம் நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள், மீண்டும் அந்த தவறை செய்யாமாட்டார்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
» குழந்தைங்க நீச்சல் கத்துக்கிறாங்களா? பெற்றோர்களே இதைப்படிங்க!
» குழந்தைங்க கவனிக்கலையா? பெற்றோர்களே எச்சரிக்கை!
» குழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா?
» குழந்தைங்க ஸ்கூல்ல அதிகமா வெட்கப்படுறாங்களா? முதல்ல அதை குறைங்க...
» குழந்தைங்க நீச்சல் கத்துக்கிறாங்களா? பெற்றோர்களே இதைப்படிங்க!
» குழந்தைங்க கவனிக்கலையா? பெற்றோர்களே எச்சரிக்கை!
» குழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா?
» குழந்தைங்க ஸ்கூல்ல அதிகமா வெட்கப்படுறாங்களா? முதல்ல அதை குறைங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum