குழந்தைங்க நீச்சல் கத்துக்கிறாங்களா? பெற்றோர்களே இதைப்படிங்க!
Page 1 of 1

Swimming Pool Safety Rules
கோடைகாலத்தில் குழந்தைகளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று நீச்சல் பழக்குவது பெற்றோர்களின் வழக்கம். எனவே உங்கள் குழந்தைகளை நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்.
அமெரிக்காவில் பெரும்பாலான குழந்தைகள் நீச்சல் குளத்தில் மரணமடைவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்த வேண்டும். நீச்சல் பயிற்சியாளர் நீச்சல் குளத்தின் சுற்றுப்புறத்திற்குள்தான் இருக்கிறாரா என்பதை கண்காணிக்கவேண்டும்.
நீச்சல் பயிற்சி அளிக்கும்போது அவசர காலத்தில் எப்படி நடந்து கொள்வது மற்றும் முதலுதவி குறித்து பயிற்சியாளர் குழந்தைகளுக்கு விளக்கி கூறவேண்டும். அவசர காலத்துக்கு உதவும் வகையில் செல்போனை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.
நீச்சல் குளத்தில் பாதுகாப்பாக குளிப்பது குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். நீச்சல் குளத்தில் அலாரம் இருக்க வேண்டும். அவசர காலத்தில் இது உதவும்.
நீச்சல் குளத்தின் அருகில் குழந்தைகள் நின்றிருக்கும் போதோ அல்லது நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போதோ அவர்களை தனியாக விட்டு செல்ல கூடாது. நீச்சல் குளத்தில் தண்ணீர் வந்து செல்லும் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது.
நீச்சல் குளம் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீரை அடிக்கடி மாற்றுகிறார்களா மற்றும் சுத்தமாக பராமரிக்கிறார்களா என கட்டாயம் கவனிக்க வேண்டும்.
நீச்சல் கற்றுக் கொள்ள செல்லும்போது தூய்மையான மற்றும் நீச்சலுக்கென உள்ள உடைகளை அணிய வேண்டும். நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது என பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கண்கள் சிவப்பாக மாறும் வகையில் அதிக நேரம் குளிக்க அனுமதிக்க கூடாது. டைவ் அடித்து குளிக்குபோது பாதுகாப்பாக குளிக்க வேண்டும்.
நீச்சல் அடிப்பதற்கு முன்பு, பின்பும் நன்கு சுத்தமாக குளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் எதுவும் தாக்காது. உடல் நலக் கோளாறு இருந்தால் நீச்சல் கற்றுக் கொள்ள செல்ல கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைங்க கவனிக்கலையா? பெற்றோர்களே எச்சரிக்கை!
» உணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா? இதைப்படிங்க!
» பளபளக்கும் கூந்தல் வேண்டுமா? இதைப்படிங்க!
» சுவீட் அதிகம் சாப்பிடுபவரா? இதைப்படிங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum