குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்!!!
Page 1 of 1

Common Baby Feeding Problems
அனைத்து தாய்மார்களும் குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது நிறைய புகார்கள் சொல்வார்கள். அவ்வாறு குழந்தைகள் சாப்பிடும் போது பிரச்சனை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் மிகுந்த குஷியில் இருப்பதால் செய்யும் குறும்புதனம், மற்றொன்று அவர்களுக்கு உணவு பிடிக்காததாலும் தான். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், பின்னர் அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம். இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்று பார்க்கலாமா!!!
* குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது அவர்கள் செய்யும் ஒரு முக்கியமான ஒரு செயல் தான் உணவை துப்புவது. வேண்டுமென்றால் கூர்ந்து கவனித்து பாருங்கள், குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது துப்புவார்கள். இதற்கு பெரும் காரணம், அவர்களுக்கு அந்த உணவை சாப்பிட்டு, வெறுப்பாகியிருக்கும். இதனால் அவர்கள் தனக்கு பிடிக்காததை அவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவை ஊட்டும் போது, அவர்கள் கவனத்தை திருப்புவதற்கு விளையாட வைத்து கொடுத்தால், தடுத்துவிடலாம்.
* சில குழந்தைகள் முகத்தை திருப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆகவே அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு பொருளை, அவர்கள் முன்பு கொண்டு வந்தால், அவர்கள் அதை வாங்கும் போது உணவை சுலபமாக ஊட்டிவிடலாம். இல்லையென்றால் ஏதாவது ஒரு வித்தியாசமானவற்றை அவர்களுக்கு காண்பித்து, அதைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே சமத்துக்குட்டியாக சாப்பிட்டுவிடுவார்கள்.
* நிறைய செல்ல குட்டிகள் உணவைக் கொண்டு வந்தாலே, கைகளால் வாயை நிரப்பிக் கொண்டு, உணவை கொடுக்க முடியாத அளவில் செய்வார்கள். அப்போது அவர்கள் முன்பு, அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடுவது போல் செய்தால், பின் அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடப் போவதால், அது பிடிக்காமல், பின் அவர்களே வாயிலிருந்து கையை எடுத்து விட்டு, உணவை வாங்கிக் கொள்வார்கள்.
* சில குட்டீஸ்களுக்கு வாயில் உணவை வைத்தால், அதை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று தெரியாது. ஆகவே அப்போது அவர்கள் முன்பு நீங்கள் உணவை வாயில் வைத்து, மென்று காண்பித்தால், அதைப் அப்படியே அவர்களும் செய்வார்கள்.
* குழந்தைகள் சாப்பிடும் போது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் சில குழந்தைகள் உண்ணும் போது அவர்கள் கைகளால் எடுக்க முயல்வார்கள். முக்கியமாக அப்போது அவர்களுக்கு இடது கை தான் வரும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு, நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில், அவர்களிடம் வலது கையால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும். இதனால் அவர்களும் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.
* மேலும் சிலர் உணவை ஊட்டும் போது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் உணவை ஊட்டுவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் குழந்தைகள் எங்கெல்லாம் ஓடுகிறார்களோ, அங்கெல்லாம் ஓடிப் போய் ஊட்ட முடியாது. ஆகவே அவர்களிடம் ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுத்தோ அல்லது கதைகளை சொல்லியோ, ஒரே இடத்தில் உட்காருமாறு செய்து ஊட்டலாம்.
மேற்கூறியவையெல்லாம் குழந்தைகள் பொதுவாக உணவு உண்ணும் போது செய்யக்கூடிய சேட்டைகள். மேலும் உங்கள் குழந்தைகள் என்னென்ன சேட்டைகளை செய்தார்கள என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்!!!
» நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» சாப்பிடும் போது பேசக்கூடாது
» குழந்தைங்க வெடி வைக்கும் போது பத்திரமாக பாத்துக்கோங்க...
» சாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க ! உடம்புக்கு நல்லது !!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum