தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...!

Go down

சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...! Empty சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...!

Post  ishwarya Mon Feb 11, 2013 11:28 am

1/5
சோனியா காந்தி

இன்று அரசியல் உலகத்தில், இன்றும் சக்தி வாய்ந்து, துணிச்சலோடு போராடும் பெண்களில் மிகச் சிறந்தவராகவும், சிறந்த அரசியல்வாதி பட்டியலில் ஆறாவது இடத்திலும் இருப்பவர் தான் சோனியா காந்தி. இவருக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் தான் தற்போதுள்ள காங்கிரஸின் முக்கியப் பொறுப்பான தலைவர் பதவியில் இருக்கிறார்.
2/5
3/5
4/5
5/5

prev next

இன்றைய உலகில் பெண்கள் இல்லாத இடங்களைப் பார்க்கவே முடியாது. அந்த அளவு பெண்கள் தங்கள் முயற்சியால் அனைத்து இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றனர். சமையலறையே கெதி என்று இருந்த பெண்களின் காலம் போய், இப்போது எந்த இடத்தில் பெண்கள் இல்லை என்று கேட்கும் அளவிற்கு ளர்ந்துள்ளனர். மேலும் ஆண்களால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் பெண்களால் முடியாது என்று நினைப்போரின் எண்ணத்தை உடைத்து எரிந்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்த பெண்களை யாராவது மறக்க முடியுமா? சொல்லப் போனால் அவர்களை நினைத்தால், மனம் தளர்ந்து இருப்பவர்களும், நிமிர்ந்து தைரியத்தோடு நடப்பார்கள். அத்தகைய சாதனை படைத்து, அனைவரது மனதிலும் நீங்காது இடம் பெற்ற பெண்களுள் சிலரை பற்றி பார்போமா!!!

சோனியா காந்தி - இன்று அரசியல் உலகத்தில், இன்றும் சக்தி வாய்ந்து, துணிச்சலோடு போராடும் பெண்களில் மிகச் சிறந்தவராகவும், சிறந்த அரசியல்வாதி பட்டியலில் ஆறாவது இடத்திலும் இருப்பவர் தான் சோனியா காந்தி. இவருக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் தான் தற்போதுள்ள காங்கிரஸின் முக்கியப் பொறுப்பான தலைவர் பதவியில் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் - உலக அழகியாக இன்றும் அனைவரது மனதிலும் பதிந்து இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஒரு மாடலிங் மற்றும் புகழ் பெற்ற பாலிவுட் நடிகையும் கூட. அவர் இந்தியாவில் பிறந்து உலக அழகியானது, இந்தியாவிற்கு பெரும் சந்தோஷத்தை மற்றும் பெருமையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், உலகிலேயே மிகவும் சிறந்த அழகியாக இவர் தான் இருப்பதாக, நிறைய ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் நினைக்கின்றனர்.

சானியா மிர்சா - அரசியலில் மட்டும் அல்ல விளையாட்டிலும் இந்தியப் பெண்கள் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானவர் தான் சானியா மிர்சா. இவர் நிறைய தேசிய மற்றும் உலகளவிலான பல போட்டிகளில் துடிப்புடன் பங்கு கொண்டு வெற்றிப் பெற்று, இந்தியாவிற்கு பெருமையை அளித்துள்ளார். இத்தகைய துடிப்பு, எனர்ஜி மற்றும்திறமை இருந்ததால் தான், இவர் மிகவும் சிறந்த பெண்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

மேரி கோம் - மேன்க்டே சன்ங்நேஜாங்க என்னும் இயற்பெயர் கொண்ட மேரி கோம் தான் இந்திய குத்துச் சண்டை வீராங்கனைகளில் மிகவும் சிறந்தவர். இவர் ஐந்து முறை உலக குத்துச் சண்டை போட்டியில் வெற்றிப் பெற்று சாம்பியன் ஆனவர். தற்போது லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். மணிப்பூரில் பிறந்த இவர் தான் இந்தியாவின் முதல் பெண் குத்துச் சண்டை வீரர். மேலும் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை வாங்கிய பெருமையும் இவருக்கே உரியது.

சுதா மூர்த்தி - சுதா மூர்த்தி தான் முதல் பெண் இன்ஜினியர். இவரை இன்ஜினியராக தேர்ந்தெடுத்தது TELCO என்னும் கம்பெனி தான். தற்போது இவர் தான் இன்போசிஸ் என்னும் கம்பெனியின் சொந்தக்காரரான நாராயண் மூர்த்தியின் மனைவியும் இவர் தான். அவர் மிகவும் சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக சேவை செய்வதில் மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவர். மேலும் இவர் பத்மஸ்ரீ மற்றும் ராஜலட்சுமி என்னும் பட்டத்தை, இவரது சிறந்த சமூக சேவை மனப்பான்மையால் பெற்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்
» குறையிருந்தும் சாதனை படைத்த 5 பிரபலமான மனிதர்கள்!!!
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்…!
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்...!
» உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum