கொடியின் இலை வகை
Page 1 of 1
கொடியின் இலை வகை
பூசணி இலை:
இதனை பறங்கி இலை என்றும் கூறுவர். பித்த கோபம், வாதாதிக்கம், அதிதாகம், இரைகின்ற பேதி, உடல் துடிப்பு, கிருமி ஆகியவை உண்டாகும்.
சுரை இலை:
சோபை ரோகம், உடல் வீக்கம், நீங்கா திரி தோஷங்கள் ஆகியவை நீங்கும். மலம் இளகி இறங்கும்.
பேய்ச்சுரை இலை:
மலையில் முளைத்த பேய்ச்சுரை இலையானது முளை மூல ரோகத்தையும், கொடிய விஷத்தையும் நீக்கும்.
பாகல் இலை:
கிருமி நோயையும், திரி தோஷ கோபத்தையும் நீக்கும். விரோசனம் உண்டாகும். இதனால் பாதரச வேகம் முறியும்.
அவரை இலை:
சிரஸ்தாப நோய், கிராணி, விஷம், சிரரோகம், சிரங்கு ஆகியவை விலகும். உதிராக்கினி உண்டாகும்.
காராமணி இலை:
வாத நோய், வாத மூலம், நீங்காத பேதி உண்டாகும். இதை ஒதுக்க வேண்டும்.
கொடிக்குறிஞ்சா இலை:
பித்த குணமுள்ள குறிஞ்சா இலை அரை கருவன், சிரங்கு, காசம், வலிய விஷ பாகம், நாக்குப்புண் அகியவற்றை நீக்கும்.
கறிப்பாலை இலை:
பிரமேக வெப்பம், சீழ்மேக சுரம், பித்த கோபம் இவற்றை நீக்கும். விந்து விருத்தியும் உண்டாகும்.
ஊசிப்பாலை இலை:
பிரமேகமும், அதிக வெப்பமும் தீரும். கண் குளிர்ச்சியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும்.
கோவை இலை:
இருமல், வாத கோபம், பெரு விரணம், சிறு சிரங்கு, உடல் வெப்பம், நீரடைப்பு ஆகியவை போகும். கண் குளிர்ச்சி அடையும்.
முசுமுசுக்கை இலை:
சிறந்த மூலிகையான முசுமுசுக்கை இலைக்கு காசம், கோழை, சுவாசம், நெஞ்சில் புகைக்கம்மல், ஜலதோஷம் ஆகியவை நீங்கும்.
கோழியவரை இலை:
வயிற்றில் காணுகின்ற பருத்த ஆமக்கட்டியும், வயிற்று நோயும், ஆந்திர பித்த வாதமும் அகலும்.
முயற்காது இலை:
குடல் அண்ட வீக்கமும், கை, கால்களில் கீல்களை பற்றி வீங்கிய வீக்கமும் விலகும்.
கழற்சி இலை:
இதனை வச்சிரம் என்றும் கூறுவர். கசப்புள்ள கழற்சி இலையால் பீசவாதம், சூலைக்கட்டு, பிரமேகம், சுரம், பலவித குன்மம், உள்ளழை ஆகியவை நீங்கும்.
வெண்கழற்சி இலை:
ஏறண்ட ரோகத்தையும், இறங்கண்ட நீயையும், ஆசையண்ட பிணியையும் நீக்கும்.
வரிக்குமட்டி இலை:
இரத்த கிருமிகள், பலவித மந்தம், இரத்த பித்தம், தசைகளை பற்றிய சர்ப்ப விஷம் இவைகளை விரைவில் அழிக்கும்.
சிறு பூனைக்காலி இலை:
வண்டி முதலிய சில விஷங்கள், மந்தம், சிலேஷ்ம கோபம், கோழைக்கட்டு ஆகியவற்றை ஒழிக்கும். காந்தத்தை சிந்தூரஞ் செய்யும்.
வேலிப்பருத்தி இலை:
இதனை உத்தாமணி இலை என்றும் கூறுவர். மணத்தை தருகின்ற வேலிப்பருத்தி இலையால் பல நோய்கள், வாத நோய், விஷம், சந்தி, திரிதோஷம், வாதம், உடல் குடைச்சல், குத்தல், நடுக்கம், சுவாசம், பலவித துடிப்பு, அக்கினி மந்தம் ஆகியவை நீங்கும். தீபனம் உண்டாகும்.
தாரா இலை:
இதனை துரா இலை என்றும் கூறுவர். தரா இலைக்கு விரணம், கிரந்தி, விந்திரிக்கட்டி சந்நிபாதம், எரிகிருமி இவை நீங்கும். நேந்திரப்புகை, கண்காசம் உண்டாகும். தாய்ப்பால் விருத்தியாகும். மாதாந்திர உதிரச்சிக்கல் நீங்கும்.
செந்தரா இலை:
வாத முளை மூலம், ருசியின்மை, வாதம் முதலிய நோய்கள், நீர்த்தாரை சூடு, ஆயாசம் இவை நீங்கும். தீபனம் உண்டாகும்.
விஷமூங்கில் இலை:
ராச பிளவை, நகச்சுற்று, பெரும்படுவன், சோபை, கர்ண சூலை முத்லிய நோய்களை போக்கும்.
சதாப்பு இலை:
இதனை சதாப இலை என்றும் கூறுவர். பால் மந்தம் முதலியவற்றால் விளைகின்ற சுரம், கணப்பேதி, கபம், பிரசவ மாதர்களின் வேதனை ஆகியவை நீங்கும். தீபனம் உண்டாகும்.
தூதுளை இலை:
காது மந்தம், காது கோளாறு, காசம், நமைச்சல், மதரோகம், அக்கினி மந்தம், திரிதோஷம், உட்குத்தம், விந்து குறைபாடு, உடல் இளைப்பு நீங்கும்.
இவை அனைத்தும் கொடியின் இலை வகைகள் ஆகும். இதை அறிந்து கொண்டு சரியான உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum